செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வாரிசு ஆடியோ லாஞ்சில் பங்கேற்க போகும் 2 முக்கிய புள்ளிகள்.. இப்பவே ப்ரமோஷனை ஆரம்பித்த தளபதி

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பற்றிய பேச்சு தான் இப்போது களை கட்டி வருகிறது. சோசியல் மீடியாவை திறந்தாலே விஜய் தான் ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். ஏற்கனவே பரபரப்பாக இருக்கும் டிவிட்டர் தளம் இப்போது விஜய்யின் வாரிசு ஆடியோ லான்ச் பற்றிய தகவல்களால் நிரம்பி இருக்கிறது.

அந்த வகையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற இருக்கிறது. நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் படகுழுவினர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Also read: வாரிசு படத்தை தயாரித்துவிட்டு அல்லல்பட்டு வரும் தயாரிப்பாளர்.. பேசாம வாய வச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம்

இதில் மற்றொரு சிறப்பம்சமும் இருக்கிறது. என்னவென்றால் கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு விஜய் ரசிகர்களை இந்த நிகழ்ச்சியின் மூலம் சந்திக்க இருக்கிறார். ஏனென்றால் அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு ஆடியோ பங்க்ஷன் எதுவும் நடைபெறவில்லை. இதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது.

அதைப் போக்கும் வகையில் இந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பல ஆச்சரியங்களை தர காத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியான தகவலின் படி இந்த நிகழ்ச்சியில் இரண்டு முக்கிய புள்ளிகள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். இதன் மூலம் விஜய் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க திட்டமிட்டு இருக்கிறார். அதாவது இந்த நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லி இருவரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Also read: தளபதியுடன் ஜோடி போட்டும் செல்லுபடி ஆகல.. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிளாப்

இவர்கள் இருவரும் தான் விஜய்யின் அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கப் போகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதில் வாரிசுக்கு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் தான் விஜய் நடிக்கப் போகிறார். அதற்கான பூஜை கூட போடப்பட்டு படத்தின் சூட்டிங் இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் இப்போதே அந்த படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த பட ஆடியோ பங்க்ஷனில் அவர்கள் இருவரும் கலந்து கொள்வது மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இதில் ஏதாவது ஒரு அப்டேட் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் விஜய் இப்போதே மிகப்பெரிய பிரமோஷனை ஆரம்பித்து இருக்கிறார்.

Also read: வளர்த்து விட்டவர்களை மதிக்காத விஜய்.. தலையாட்டி பொம்மையாக ஆட்டிப்படைக்கும் முதலாளி!

Trending News