ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அவங்க 2 ஹீரோக்கள் இல்லன்னா நான் ஜீரோ தான்.. தமன்னா சர்வதேச அளவில் ட்ரெண்டாக காரணம் இதுதான்

Actress Tamannah: தமன்னாவின் மார்க்கெட் இப்போது உச்சாணி கொம்புக்கு கொண்டு சென்று விட்டது. அந்த அளவுக்கு இப்போது எங்கு திரும்பினாலும் தமன்னாவின் பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் ரீல்ஸ் வீடியோக்களில் இந்த பாடல் தான் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் சின்னத்திரை பிரபலங்கள் முதல் சோசியல் மீடியா பிரபலங்கள் வரை பலரும் காவாலா பாடலுக்கு தான் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட இந்த பாடல் பயங்கர பேமஸ் ஆகி இருக்கிறது.

Also read: ஹீரோவாக நடித்தும் கிடைக்காத அங்கீகாரம்.. ரஜினியின் படத்தால் உச்சாணி கொம்புக்கு சென்ற நடிகர்

இதற்கெல்லாம் முக்கிய காரணம் தமன்னா ஆடிய குத்தாட்டம் தான். ஆனால் அவர் நடிக்க வந்த புதிதில் சுட்டு போட்டாலும் டான்ஸ் வராது என்ற அளவுக்கு தான் இருந்திருக்கிறார். அதன் பிறகு கஷ்டப்பட்டு நடனத்தை கற்றுக் கொண்டு தான் இந்த அளவுக்கு வெறித்தனமாக ஆடும் நிலைக்கு வந்திருக்கிறார்.

இதற்கு பின்னணியில் இரண்டு ஹீரோக்கள் இருப்பது பலரும் அறியாத விஷயம். இதை தமன்னாவே வெளிப்படையாக, இந்த ஹீரோக்கள் இல்லை என்றால் நான் டான்ஸில் ஜீரோவாக தான் இருந்திருப்பேன் என்று கூறியுள்ளார். அந்த வகையில் தமன்னாவை ஆட வைத்த பெருமை விஜய் மற்றும் பிரபுதேவாவுக்கு உண்டு.

Also read: ரஜினியையே ஆட்டம் காண வைத்த மலையாள நடிகர்.. ஜெயிலரில் ஸ்கோர் செய்த ஒத்த சிங்கம்

அதில் விஜய்யின் நடன திறமையை பற்றி அனைவருக்கும் தெரியும். டான்ஸ் என்றாலே விஜய் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் பயங்கர எனர்ஜியோடு ஆடுவார். அவரிடமிருந்து தான் தமன்னா நடன அசைவுகளை தெரிந்து கொண்டாராம். இவர்கள் இருவரும் சுறா படத்தில் இணைந்து நடித்த போது டான்ஸ் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை தமன்னா கற்றுக் கொண்டாராம். இவருக்கு அடுத்தபடியாக பிரபுதேவாவும் தமன்னாவுக்கு டான்ஸ் ஆட சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் தேவி படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். அந்த நட்பின் அடிப்படையிலேயே தமன்னா இப்போது கஷ்டமான நடன அசைவுகள் இருந்தால் உடனே பிரபுதேவாவின் வீட்டிற்கு சென்று விடுவாராம். அங்கு அவரிடம் நன்றாக ஆட ப்ராக்டிஸ் செய்து கொண்டு தான் ஷூட்டிங் செல்வாராம். இப்படி இந்த இரு ஹீரோக்களும் தான் காவாலா பாட்டில் தமன்னா அட்டகாசமாக ஆடி இருப்பதற்கு பின்னணி காரணமாக இருக்கிறார்கள்.

Also read: ஐட்டம் பாட்டுக்கு இத்தனை கோடியா.? ஜெயிலர் படத்துக்காக தமன்னா வாங்கிய சம்பளம்

Trending News