புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தனுஷ் பிறந்த நாளை குறிவைத்து ரீ ரிலீசாகும் 2 படங்கள்.. சூப்பர் ஸ்டார் கொடுத்த டிப்ஸ்

தனுஷ் தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஜூலை 28ஆம் தேதி 1984ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக தனுஷ் தான் இயக்கி நடித்த 50-வது படமான ராயன் படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்தப் படம்.

இந்நிலையில் ராயன் படம் இந்த வார இறுதி நாட்களில் ஓடிய பிறகு தனுஷின் இரண்டு படங்களை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர். அந்த படங்கள் ராயன் வசூலை பாதிக்கும் என்பதால் இதுவரை ரிலீஸ் செய்யாமல் இருந்தனர். நாளை ஜூலை 28 தனுஷ் நடித்து வெளிவந்த இரண்டு சூப்பர் ஹிட் மாஸ் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப் போகிறார்கள்.

புதுப்பேட்டை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படம் புதுப்பேட்டை. தனுசுக்கு ஆக்சன் ஹீரோவாக பெயர் வாங்கிக் கொடுத்தது. கொக்கி குமாராக இந்த படத்தில் தனுஷ் நடித்திருப்பார். இப்பொழுது இதை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.

வடசென்னை: தனுஷிற்கு மிகவும் விருப்பமான இயக்குனர் வெற்றிமாறன். இவர்கள் கூட்டணியில் பொல்லாதவன், வடசென்னை, அசுரன் என எல்லா படங்களும் சூப்பர் ஹிட். இப்பொழுது வடசென்னை படத்தையும் ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் கொடுத்த டிப்ஸ்

தனுசுக்கு ராயன் படம் சம்பந்தமாக நிறைய அறிகுறிகளை வழங்கிருக்கிறார் சூப்பர் ஸ்டார். அது மட்டுமின்றி படம் ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கு சென்று பல டிப்ஸ் கொடுத்திருக்கிறார். இப்பொழுது இந்த இரண்டு படங்களையும் ரீ ரிலீஸ் செய்யும் தேதிகளையும் ரஜினி தான் குறித்து கொடுத்திருக்கிறார்.

Trending News