மஞ்சுமல் பாய்ஸ், ப்ரேமலுக்கு தண்ணி காட்டிய 2 தமிழ் படங்கள்.. பார்க்கிங், ஸ்நாக்ஸ் வசூலில் அடித்த கொள்ள லாபம்

மலையாள சினிமாவில் தான் நல்ல படங்கள் வெளி வருகிறது. அவர்கள் படம் தரமாக இருக்கிறது என்ற பேச்சுக்களுக்கு எல்லாம் இரண்டு தமிழ் படங்கள் முற்றுப்புள்ளி வைத்து மூட்டை கட்டி உள்ளது. மஞ்சு மல் பாய்ஸ் மற்றும் ப்ரேமலு இந்த இரண்டு படங்களும் தமிழ் மொழியிலும் ரிலீஷாகி சக்க போடு போட்டது.

மஞ்சுமல் பாய்ஸ் படம் மலையாள திரை உலகில் 200 கோடிகள் வரை வசூலித்தது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் 55 கோடிகள் வசூல் சாதனை செய்துள்ளது. இதைப்போலவே வெளியிடப்பட்ட பிரேமழு படம் மொத்தமாய் 130 கோடிகளும், தமிழ்நாட்டில் மட்டும் 12 கோடிகளும் வசூலித்து சாதனை செய்தது.

இதனால் மலையாள சினிமா தான் நம்பர் ஒன் என அலட்டிக்கொண்டிருந்த நேரத்தில் தமிழில் வெளிவந்த 2 படங்கள் அதற்கு சரியான சாட்டையடி கொடுத்தது. சமீபத்தில் அந்த இரண்டு படங்களின் பார்க்கிங் மற்றும் ஸ்னாக்ஸ் கட்டணம் மூலம் வந்த வசூலே அந்த படம் திரையிடப்பட்ட வசூலை விட முந்தியது.

பார்க்கிங், ஸ்நாக்ஸ் வசூலில் அடித்த கொள்ள லாபம்

சூரி நடிப்பில் கடந்த மே மாதம் வெளிவந்த கருடன் படமும், விஜய் சேதுபதி நடிப்பில் ஜூன் மாதம் வெளிவந்த மகாராஜா படமும் தமிழ் சினிமாவை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றது. இந்த 2 படங்கள் திரையில் ஓடும் போது வசூலித்த பார்க்கிங் மட்டும் ஸ்னாக்ஸ் வருமானம் 110 கோடிகளாம்.

20 கோடியில் எடுக்கப்பட்ட மகாராஜா படம் மட்டும் 108 கோடிகள் வசூலித்தது. அதே 20 கோடிகளில் எடுக்கப்பட்ட கருடன் படமும் 68 கோடிகள் வசூலித்து சாதனை செய்துள்ளது. இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மலையாள சினிமாவிற்கு நிகராக பேசப்பட்டது.