செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக்பாஸில் 20 போட்டியாளர்களுக்கும் தெரிந்த ஒரே முகம்.. ஓவர் நைட்டில் ட்ரெண்டான சம்பவம்

தற்போது சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தான். மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி தற்போது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகமாக்கி இருக்கிறது.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதில் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரே முகம் என்றால் அது ஜிபி முத்துவாக தான் இருக்க முடியும். யூடியூப் மற்றும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது மேலும் சுவாரசியத்தை தூண்டியுள்ளது.

Also read : மெர்சலாக்கிய விஜய் டிவி.. பாலிவுட் ஸ்டைலில் இருக்கும் பிக்பாஸ் வீட்டின் செலவு மட்டும் இவ்வளவா?

மிகவும் பயந்த சுபாவமாக இருக்கும் ஜி பி முத்து நேற்று முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். அப்போதே அவர் அலப்பறையை ஆரம்பித்து விட்டார். தனியாக இருக்க மாட்டேன் என்று கமலிடம் கதறாத குறையாக பேசினார். இது ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் ஜி பி முத்து பற்றி தெரிந்திருக்கிறது. வீட்டிற்குள் வந்த உடனே அவர்கள் அனைவரும் அவரிடம் கலகலப்பாக பேசினார்கள். ஆனாலும் புது முகங்களை பார்த்த பீதி அவரின் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

Also read : ஜி பி முத்து தொடர்ந்து பிக்பாஸில் வர இருக்கும் யூடியூப் பிரபலம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் உலகநாயகன்

இருப்பினும் அவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை பயணிப்பார். என்று தெரிகிறது. ஏனென்றால் இவர் வீட்டிற்குள் சென்ற சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் கூட்டம் இவருக்கென தனி ஆர்மியை ஆரம்பித்து விட்டனர். அந்த அளவுக்கு இவர் சோசியல் மீடியாவில் இப்போது ட்ரெண்டாக மாறியிருக்கிறார்.

அந்த வகையில் ஜிபி முத்துவுக்கு போட்டியாளர்கள் யாரைப் பற்றியும் எதுவும் தெரியவில்லை. ஆனால் வந்திருந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் இவரை பற்றி தெரிந்திருக்கிறது. இதுவே அவருக்கான ஒரு முன்னேற்றமாக இருக்கிறது. இனி அடுத்து வரும் நாட்களில் இவர் தன் நடவடிக்கைகள் மூலம் ரசிகர்களை கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read : ஷூட்டிங் ஸ்பாட்டையே அல்லோலப்படுத்தும் ஜி பி முத்து.. தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த அதிசயம்

Trending News