திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

100 கோடிக்கு மேல் வசூல், 2018 படத்திற்கு தடை.. முதலாளிகள் கனவில் மண்ணை அள்ளி போட்ட சம்பவம்

2018 Movie: மலையாள சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் படியான படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான படம் 2018. டோவினோ தாமஸ், ஆசிப் அலி, கலையரசன் மற்றும் பலர் நடிப்பில் இப்படம் உருவாகி இருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை கண் முன் காட்டும் படியாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி கிட்டதட்ட 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இப்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Also Read : 160 கோடி வசூல் சாதனை, கேரளாவை உலுக்கிய 2018 உண்மை சம்பவம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அதுமட்டுமின்றி மற்ற மொழிகளிலும் இப்படத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளனர். இந்த சூழலில் 2018 வசூலை பாதிக்கும்படி ஒரு சம்பவம் நடந்தேறி உள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த மனக்கவளையில் உள்ளனராம். அதாவது பொதுவாக திரையரங்குகளில் படம் ஓடிய பிறகு ஓடிடியில் வெளியாவது தற்போது வழக்கமாக இருக்கிறது.

பெரும்பாலும் திரையரங்குகளில் நல்ல வசூலை ஈட்டிய பிறகுதான் அந்த படங்களை ஓடிடியில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் திரையரங்குகளிலேயே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 2018 படம் திடீரென ஓடிடியில் வெளியாகி உள்ளது.

Also Read : 100 கோடி வசூலை தாண்டிய ரியல் கேரளா ஸ்டோரி இதுதான்.. பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 2018 தமிழ் ட்ரெய்லர்

தற்போது வரை நல்ல வசூலை கொடுத்த 2018 படம் ஓடிடியில் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து பார்ப்பது கடினம். இதனால் கேரளாவில் ஓடிடி நிறுவனத்திற்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது திரையரங்குகளில் வெளியாகும் எல்லா படமுமே வெற்றி பெறுவதில்லை.

அத்தி பூத்தாற்போல் ஏதாவது ஒரு சில படங்கள் தான் வெற்றி அடையும். அதன் மூலம் தோல்வி படங்களின் நஷ்டத்தை ஈட்டு கட்டி வருகிறோம். இப்படி இருக்கும் சூழலில் இன்னும் சில நாட்கள் திரையரங்குகளில் 2018 படம் ஓடினால் கண்டிப்பாக 200 கோடி வசூலை தொட்டுவிடும். ஆனால் அதற்கு பாதகம் விளைவிக்கும் விதமாக ஓடிடி நிறுவனம் இவ்வாறு செயல்பட்டு உள்ளதாக தியேட்டர் ஓனர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

Also Read : கேரளா ஸ்டோரிக்கு இணையாக வசூல் செய்த 2018.. பாசிட்டிவ் விமர்சனத்தால் கொட்டிய பணமழை

Trending News