காத்திருந்து மொக்கை வாங்கிய தான் மிச்சம்.. 2022 வெறுப்பேற்றி அட்டர் பெயிலியரான 6 படங்கள்

இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான 6 படங்கள் அட்டர் ஃபிளாப் ஆகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாவதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் படுதோல்வி அடைந்துள்ளது. அவ்வாறு உள்ள 6 படங்களை தற்போது பார்க்கலாம்.

மாறன் : கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மாறன். இப்படம் வெளியாவதற்கு முன்பு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது.

Also Read : மண்ணை கவ்விய நானே வருவேன்.. ஆனாலும் தனுஷ் காட்டும் பேராசை, தயாரிப்பாளர் ஓட்டம்

மகான் : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், துருவ் விக்ரம் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மகான். இந்த படத்தில் முதல் முறையாக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் ஒன்றாக நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் இருந்தது. ஆனால் கடையில் சுவாரசியம் இல்லாததால் படுதோல்வி அடைந்தது.

வீரபாண்டியபுரம் : சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் வீரபாண்டியபுரம். சுசீந்திரனின் முந்தைய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்திற்கு ரசிகர் மத்தியில் ஆர்வம் இருந்தது. ஆனால் படம் ஆக்டர் பெயிலியர் ஆகிவிட்டது.

Also Read : காதலியை கழட்டி விட்ட ஜெய்.. கமுக்கமாக நடக்கும் திருமண ஏற்பாடு

கொம்பு வச்ச சிங்கம்டா : பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியான திரைப்படம் கொம்பு வச்ச சிங்கமடா. இப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்த கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தது. மேலும் வசூலிலும் மிகுந்த அடி வாங்கியது.

சாணி காகிதம் : அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சாணி காகிதம். இப்படத்தின் மூலம் முதல் முறையாக கதாநாயகனாக செல்வராகவன் அறிமுகமாகி இருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

ஹே சினாமிகா : பிருந்தா இயக்கத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஹே சினாமிகா. தமிழில் துல்கர் சல்மானின் முந்தைய படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் ஹே சினாமிகா படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

Also Read : 4 படத்திலும் வித்தியாசம் காட்டி கலக்கிய துல்கர் சல்மான்.. அத்தனையும் தூள் கிளப்பிய ஹிட்