திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

2023 ல் பெரிய ஹீரோக்களை திரும்பி பார்க்க செய்த 6 இயக்குனர்கள்.. சித்தா மூலம் சிந்திக்க வைத்த இயக்குனர்

2023 Best Directors in Tamil Cinema:“நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடிப்போகும்! கண்ணிமைக்கும் நேரத்திலே எல்லாம் மாறுமே” என்ற கவிஞனின் வார்த்தை மெய்ப்பிக்கும் வண்ணம் சிலர் நல்ல திறந்த திரைக்கதைகளை தமிழ் சினிமாவில் விதைத்து தமிழ்த் திரையுலகை திரும்பி பார்க்க வைத்துள்ளனர் இயக்குனர்கள்.

விக்னேஷ் ராஜா: தரமான கிரைம் திரில்லரை இயக்கி அதன் வெளியீட்டின் போது தூக்கம் இல்லாமல் தவித்து வந்தார் விக்னேஷ் ராஜா. போர் தொழில், விக்னேஷ் ராஜாவின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியே. விறுவிறுப்பை அதிகமாக்கி ரசிகர்களின்  நாடித்துடிப்பை எகிற வைத்த போர்த்தொழில் திரையில் பல நாட்கள் ஓடி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது.

மந்திரமூர்த்தி: அறிமுக இயக்குனராக அயோத்தியை கொடுத்த மந்திரமூர்த்தி. என்ன மந்திரம் செய்தாரோ படத்தின் முடிவில் அனைவரின் மனதையும் கணக்க வைத்தார். மனிதத்தை விதைத்து மனிதனை மனிதனாக உணர வைத்தார். நல்ல திரைக்கதை மக்களிடையே போய் சேரும் என்ற நம்பிக்கையுடன்  துணிச்சலாக எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அமைதியாக வென்றிருக்கிறார் மந்திரமூர்த்தி.

Also Read: 2023 நம்மளை உறைய வைத்த 4 பேர்.. நாயகனுக்கு ரிவீட் அடித்து மார்க் ஆண்டனி பட வில்லன்

விநாயக் சந்திரசேகர்: குட் நைட் பட இயக்குனர் அன்றாட வாழ்வில் கேலி பொருளாக உள்ள குறட்டை, ஒரு மனிதனின் வாழ்வில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் என்பதை கிண்டலாகவும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை எதார்த்தமாகவும் வெளிப்படுத்தி அவர்களின் உலகில் நம்மை நுழைத்திருந்தார் இருந்தார் இயக்குனர்.

கணேஷ் கே பாபு:டாடா படத்தின் மூலம்  அறியப்பட்ட இயக்குனர் கணேஷ்கே பாபு  அளவான வசனங்கள் மூலம் அளவற்ற புகழை சம்பாதித்தார். குறைவான பட்ஜெட்டின் நிறைவான லாபத்தை சம்பாதித்த டாடாவை தொடர்ந்து லைக்கா தயாரிப்பில்  அடுத்த படத்தில் கமிட் ஆகி உள்ளார் மேலும் சொந்தமாக கதை திரைக்கதை எழுதி “ரேவன்” என்ற படத்தை தயாரிக்கவும் உள்ளார் கணேஷ்.

S.U அருண்குமார்: சமூக அவலங்களை ஒழிக்கும் வண்ணம் சிறப்பான திரை கதையுடன் ரசிகர்களை சிந்திக்க வைத்தார் இந்த சித்தா. பெண்கள், குழந்தைகள், துப்புரவு தொழிலாளர்கள் இவர்கள் மீதான அடக்கு முறையை அதனை கையாளும் விதத்தை உரக்க சொல்லி இருந்தார். சமூகத்தின் பிரச்சனைகளை ஆண் பெண் என இரு கண் கொண்டு நோக்கி  பெண்ணின் வலியையும் ஆணின் கோபத்தையும் உணர வைத்திருந்தார் இயக்குனர். பெண் குழந்தைகள் மீதான வன்முறையை சமூகம் எப்படி கையாள வேண்டும் என்பதை அருமையாக கூறியுள்ளார் அருண்குமார்.

ரவி முருகையா: விதார்த், சரவணன், அருந்ததி நாயர் போன்ற முன்னணி நட்சத்திரங்களோடு சின்ன சின்ன கதாபாத்திரங்களும் போட்டி போட்டு நடித்த படம் ஆயிரம் பொற்காசுகள். அறிமுக இயக்குனர் இந்த அளவு நகைச்சுவையில் ஸ்கோர்  செய்திருப்பது என்பது நம்ப முடியாததாகவே உள்ளது. மானியத்தில் கழிப்பறை கட்ட புதையல் கிடைத்த கதையை நகைச்சுவையுடன் பகிர்ந்து அளித்ததே ஆயிரம் பொற்காசுகள்.

Also Read: 2023-இல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்.. மார்க்கெட் இல்லனாலும் திரிஷாவை ஓரம் தள்ளிய நயன்

- Advertisement -

Trending News