ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

2023 நம்மளை உறைய வைத்த 4 பேர்.. நாயகனுக்கு ரிவீட் அடித்து மார்க் ஆண்டனி பட வில்லன்

2023 Best villan in tamil cinema: “உன் எதிரி யார் என்று சொல் நீ யார் என்று சொல்கிறேன்”, என்றும் பலமான எதிரியே பலமான நாயகனே உருவாக்குகிறார். படத்தில் வில்லனுக்கான அழுத்தம் குறையும்போது நாயகனுக்கான ஸ்கோப் குறைந்து படத்தை தரம் இறக்கி விடுகிறது. எனவே வில்லனே படத்தை தூக்கி நிறுத்தும் தூணாவான். அப்படியாக தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான படங்களை தூக்கி நிறுத்திய வில்லன்களில் சிலர்,

கௌதம் வாசுதேவ் மேனன்:  சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் ஒரு சில காட்சிகளிலேயே தோன்றினாலும் நாயகனை மிரட்டி திரையரங்குகளை அதிர வைத்திருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன். குணச்சித்திர நடிகராகவே பார்த்து பழக்கப்பட்ட இவரை வில்லனாக கண்டு  ரசிகர்கள் அரண்டு போயினர்.

படத்தில் என்னை விட்டு பார் நான் யார் என்று தெரியும் என்பார் அது நாயகனுக்கு அன்றி ரசிகர்களுக்கே சொன்னது போல் சைலன்ட்  கில்லராக வந்து பத்து தலையில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன்.

Also read: 2023 முடிவுக்கு வரும் படங்கள்…சரக்கை நம்பி இருக்கும் மன்சூர்அலிகான்!

விநாயகம்: ஜெய்லர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லன் என்றால் சும்மாவா? துரோகத்தின் சம்பளம் மரணம் என கணக்கு போட்டு மிரட்டி இருந்தார் விநாயகம். கொலை,கொள்ளை, ஆட்டம் ,பாட்டம் என தன் நடிப்பில் அனைவரையும்  உறைய வைத்திருந்தார் விநாயகம்.

எஸ் ஜே சூர்யா: வில்லனாக மார்க் ஆண்டனி படத்தை தூக்கி நிறுத்தி இருந்தது எஸ்ஜே சூர்யா மட்டும்தான். நடிப்பு அரக்கன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் எஸ் ஜே சூர்யா. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 2023 இல் வெளியான மார்க் ஆண்டனியில் பாட்டு, டான்ஸ் என டிசிப்ளினான கேங்ஸ்டர் ஆக நடித்து வசனங்களை மக்கள் மத்தியில் பரவ விட்டிருந்தார் எஸ் ஜே சூர்யா.

ஃபகத் பாசில்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேல் மற்றும் உதயநிதி நடித்த மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்தது இவருடைய வெற்றி. படத்தின் வெளியீட்டுக்கு பின் இவரை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். இவருக்கென ரீல்ஸ்கள் தயார் செய்து வலம் வர செய்தனர். இதனைப் பார்த்த இயக்குனர் சமூகநீதி எதிர்மறையாக பிரதிபலிக்கப்படுகிறதோ என்று பயந்தார். ரசிகர்கள் இவரின் கேரக்டரை கொண்டாடுவதை அறிந்து சர்ச்சைக்குள்ளான படங்களை தனது சொந்த வலைதளபக்கத்தில் இருந்து நீக்கவும் செய்தார் ஃபகத் பாசில்.

Also read:2023 இல் கதைக்காக மட்டுமே ஓடிய 6 படங்கள்.. ஹரிஷ் கல்யாணை புரட்டி எடுத்த MS பாஸ்கர்

Trending News