வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2023 இல் கெட்ட பேர் வாங்கிய 5 இயக்குனர்கள்.. சந்திரமுகியை ஏமாற்றிய வாசு

2023 kollywood directors had badname in his movies: தமிழ் சினிமாவில் புது இயக்குனர்களும் புத்தம் புது சாதனைகளும் களமிறங்கிக் கொண்டே இருக்கின்றன. நாளுக்கு நாள் தமிழ் சினிமா மெருகேறிக் கொண்டே வருகிறது. இயக்குனர்கள் சிலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவறாக புரிந்து கொண்டதோடு வியாபார நோக்கிலேயே படத்தின் மொத்த கவனத்தையும் செலுத்தி சில எதிர்மறையான விளைவுகளையும் சந்தித்து உள்ளனர்.

அவ்வகையில் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் இந்த ஆண்டு சில திறமையான இயக்குனர்கள் தங்களின் படைப்புகளை ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் கொடுக்க தவறியுள்ளனர். அவர்களில் சிலர்,

லோகேஷ் கனகராஜ்: மாஸ்டர் இன் வெற்றிக்கு பின் இரண்டாவது முறையாக விஜய்யின் கூட்டணியில் இவர் இயக்கிய லியோ வசூலில் வெற்றி நடை போட்டாலும் விமர்சன ரீதியாக சில சறுக்கல்களை சந்தித்தது. ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்து அதற்கு  தகுந்தாற்போல் வேகமாக படப்பிடிப்பை முடிக்கும் வண்ணம் திரைக்கதையில் சொதப்பி இருந்தது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

அஹமத்: இறைவன் படத்தை பார்க்கும் போது ஒரு இனம் புரியாத பயம் நம்முள் ஏற்படும் என்று சொல்லி படத்தின் ஹைப்பை ஏத்தி இருந்தார் இயக்குனர் அஹமத். விறுவிறுப்புக்கு குறைவு வைத்து பயத்திற்கு பதில் சலிப்பை ஏற்படுத்தி இருந்தார் இயக்குனர். ரசிகர்கள் தனி ஒருவன் ரேஞ்சுக்கு ஜெயம் ரவியை எதிர்பார்த்தனர் ஆனால் அவரை சைக்கோவின் பின்னால் ஓட வைத்திருந்தனர். சைக்கோ கொடூரமாக உடலை கூறு போடுவது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

Also Read:சொன்ன தேதியில் படத்தை வெளியிடாமல் ரசிகர்களை ஏமாற்றும் 5 பெரிய படங்கள்.. விக்ரமை பாடாய்படுத்தும் இயக்குனர்

வாசு: இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில்18 வருடங்களுக்கு முன் வெளிவந்த சந்திரமுகி ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் அதில் பாதியைக் கூட எட்டவில்லை சந்திரமுகி 2. ராகவா, கங்கனா என பெரிய புள்ளிகளை இறக்கியும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியவில்லை என்பதுதான் சோகம். திகிலுடன் மிரட்ட வந்தவர்கள் கடுப்பேத்தி விட்டு சென்றனர்.

முத்தையா: கிராமத்து கதையை அடிப்படையாக வைத்து படம் இயக்கி வரும் முத்தையா கிராமத்து சென்டிமென்ட் களால் மக்களின் மனதை தொட்டு விடுவார். ஆனால் காதர் பாட்சாவில் பல சென்டிமென்ட்களை வைத்து மத ஒற்றுமையை உருவாக்க நினைத்து ரசிகர்களை பலவகையிலும் பழிவாங்கி இருந்தார் முத்தையா.

வசந்தபாலன் : அர்ஜுன் தாசின் அசத்தலான நடிப்பில் வசந்தபாலன் இயக்கிய அநீதி ஏழைகளுக்கான நீதியை வாங்கித் தந்தது என்றே சொல்லலாம். சாமானியனின் வலியை அனைவரும் உணர முயற்சித்து இருக்கிறார் வசந்த பாலன். முதல் பாகத்தில் விறுவிறுப்புக்கு கொஞ்சம் பஞ்சம் வைக்காமல் இருந்திருந்தால் அநீதிக்கு கொஞ்சம் நீதி கிடைத்திருக்கும்.

Also Read: 24 வருடமாக டாப் கலெக்ஷனில் அசைக்க முடியாத இடத்தில் ரஜினி.. வசூலில் அடித்து நொறுக்கிய 4 படங்கள்

Trending News