செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்த வருடம் தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்.. அடேங்கப்பா இத்தனை ஜோடிகளா!

2023 Thala Diwali Celebrity Couples:  திருமணமான தம்பதிகள் அவர்களுடைய முதல் தீபாவளையை தல தீபாவளியாக கொண்டாடுவார்கள். அப்படி இந்த 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நமக்கு பிடித்த பிரபலங்கள் சிலர் தல தீபாவளி கொண்டாட இருக்கிறார்கள். யார் அந்த பிரபலங்கள் என்று பார்க்கலாம்.

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன்: இந்த வருடம் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டான ஜோடி அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தான். இருவருமே சினிமா துறையில் இருந்திருந்தாலும், இவர்கள் பல வருடங்களாக காதலித்தது வெளியில் தெரியாமலேயே இருந்திருக்கிறது. இந்த தம்பதிகளுக்கு இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடி தங்களுடைய தல தீபாவளியை ஜாலியாக கொண்டாட இருக்கிறார்கள்.

கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன்: தமிழில் தமிழில் அச்சம் என்பது மடமையடா என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த போது, கௌதம் கார்த்திக் உடன் நட்பு மலர்ந்து பின்னர் காதலாக மாறிவிட்டது. இந்த தம்பதிகளுக்கு கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய தல தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

அமலா பால் – ஜெகெத் தேசாய்: நடிகை அமலா பால் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் ஏற்பட்ட பிறகு திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருந்தார். சமீபத்தில் அவருடைய ட்ராவல் பார்ட்னர் ஜெகத் தேசாயை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. அமலா பாலும் தன்னுடைய தல தீபாவளியை இந்த வருடம் கொண்டாடுகிறார்.

கவின் – மோனிகா: சினிமா ரசிகர்களை பரபரப்பாகிய திருமணம் என்றால் அது கவின் மோனிகா திருமணம் தான். கவின் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு அவருக்கு நிறைய ரசிகர்கள் சேர்ந்தார்கள். டாடா பட வெற்றிக்கு பிறகு தன்னுடைய நீண்ட வருட காதலி மோனிகாவை கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி திருமணம் செய்தார். இந்த ஜோடியும் தல தீபாவளியை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள்.

ஹரிஷ் கல்யாண் – நர்மதா: நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு பெண் ரசிகைகள் ரொம்பவே அதிகம். இவர் மிகப்பெரிய தொழிலதிபரின் மகளான நர்மதா உதயகுமாரை அக்டோபர் 28ஆம் தேதி திருமணம் செய்தார். சமீபத்தில் தான் இவர்கள் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினார்கள். இந்த ஜோடியும் வரும் 12ஆம் தேதி தல தீபாவளி கொண்டாட இருக்கிறது.

ஹன்சிகா மோத்வானி – சோஹைல் கதுரியா: தமிழ் சினிமா ரசிகர்களால் குட்டி குஷ்பு என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த இவர், தொழில் அதிபர் சோஹைல் கதூரியாவை கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி திருமணம் செய்தார். இவர்களும் இந்த வருடத்தின் தலை தீபாவளி ஜோடிகள் தான்.

 

Trending News