புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2024 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 உணவுகள்.. கஞ்சி, மாங்காய் ஊறுகாய் என தேடிய இணையவாசிகள்

Top 10 Food In Google Search : 2024 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் இந்த உணவுகளை கூட கூகுளில் பார்த்து சமைப்பார்களா என ஆச்சரியப்படும் வகையில் சில உணவுகள் அமைந்திருக்கிறது.

இதில் முதல் இடத்தில் பார்ன் ஸ்டார் மார்டினி என்ற உணவு வகை இடம் பெற்று இருக்கிறது. இது ஒரு நவீன கிளாசிக் காக்டெய்ல் ஆகும். அடுத்ததாக இரண்டாவது இடத்தில் யாரும் எதிர்பார்க்காத மாங்காய் ஊறுகாய் இடம் பெற்றிருக்கிறது.

ஆகையால் இந்தியர்கள் அதிகம் இந்த ஆண்டு மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என சர்ச் செய்து பார்த்துள்ளனர். மூன்றாவது இடத்தில் தன்யா பஞ்சரி இடம் பெற்றிருக்கிறது. இது கொத்தமல்லி விதைகள், பாதாம், நெய், சக்கரை, திராட்சை சேர்த்து தயாரிக்கப்படும் உணவாகும்.

2024 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10 உணவுகள்

மேலும் நான்காவது இடத்தில் உகாதி பச்சடி என்ற உணவு இடம் பெற்றிருக்கிறது. இது அறுசுவையும் தரக்கூடிய ஒரு பதார்த்தம் ஆகும். சர்னாம்ரிட் என்ற உணவு ஐந்தாவது இடத்தில் அதிகம் தேடப்பட்ட உணவாக இருக்கிறது.

அடுத்ததாக சூடான மிளகாய் மற்றும் பாலாடை கட்டி ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் எமா தட்சி ஆறாவது இடத்தில் இருக்கிறது. இது ஒரு பூட்டானியா உணவு வகையாகும்

காபி வகையான ஃபிளாட வைட் ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. மேலும் இந்தியர்களின் உணவு வகையான கஞ்சி எட்டாவது இடத்தில் இருக்கிறது. ஷங்கர்பலி என்ற உணவு வகை ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.

கேரளாவில் புகழ்பெற்ற உணவான சம்மந்தி பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதாவது இது ஒரு வகையான தேங்காய் சட்னி அல்லது துவையல் போன்றது. இந்த பத்து உணவுகள் இந்த வருடம் அதிகம் இணையவாசிகளால் தேடப்பட்டு உள்ளது.

Trending News