சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அடுத்த ஆண்டு முழுக்க வெளியாகப்போகும் பிளாக்பஸ்டர் படங்கள்..

இந்த ஆண்டு வெளியான ஏகப்பட்ட தமிழ் படங்கள் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. மேலும் பான் இந்திய அளவில் வெளியான கல்கி மற்றும் புஷ்பா 2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. இப்படி இருக்க, அடுத்த ஆண்டாவது ஒரு 1000 கோடி வசூலை கோலிவுட் தொட்டு விட வேண்டும் என்று முழு வீச்சில் வேலை பார்த்து வருகிறார்கள்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை வெளியாகப்போகும் முக்கியமான படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். அடுத்த ஆண்டு ஜனவரியில், விடாமுயற்சி, வணங்கான், கேம் சேஞ்சர், வீர தீர சூரன் ஆகிய 4 படங்கள் வெளியாகிறது. பிப்ரவரியில், கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் வா வாத்தியார் படம் வெளியாகிறது.

மார்ச் மாத இறுதியில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் சூர்யா44 படம் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தனுஷின் இட்லி கடை வெளியாகவுள்ளது. தொடர்ந்து மே மாதம் முக்கியமான மூன்று படங்கள் வெளியாகிறது. நிச்சயம் பெருமளவில் போட்டி இருக்கு.

மே மாதம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் வெளியாகிறது. அதே நாளில் தான் அஜித்தின் குட் பேட் அக்லீ படமும் ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. இதனால் கடுமையான போட்டி நிலவும். மேலும், அதே மே மாதத்தில் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக்கொண்டு இருக்கும், SK23 படம் ரிலீசாகும்.

ஜூன் மாதம், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் Thug Life படம் ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து ஜூலை மாதம் கார்த்தி நடிப்பில் அடுத்த படமான சர்தார் 2 படம் ரிலீஸாகவுள்ளது.

இதை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஆர்.ஜெ.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துக்கொண்டு இருக்கும், சூர்யா45 படம் ரிலீசாகும். தொடர்ந்து அக்டோபர் மாதம் எல்லோரும் எதிர்பார்க்கும் தளபதி69 படம் ரிலீசாகும். அடுத்த ஆண்டு முழுக்க ரசிகர்களை மகிழ்விக்க இத்தனை படங்கள் ரிலீசாகிறது.

Trending News