Top 5 Movies 2025: 2025 ஆரம்பித்து இரண்டு மாதங்கள் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த நாட்களில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆனது.
ஆனால் சில படங்கள் தான் ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவழைத்தது. அதிலும் பொங்கல் ரேசில் பல படங்கள் வரிசை கட்டியது.
ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே கவனம் பெற்றது. அப்படி 2025-ல் வெளியாகி அதிக லாபம் பார்த்து கல்லா கட்டிய 5 படங்கள் பற்றி இங்கு காண்போம்.
2025-ல் கல்லா கட்டிய 5 படங்கள்
அதில் லேட்டா வந்தாலும் கலெக்ஷனில் கெத்து காட்டி இருக்கிறது விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிப்ரவரி முதல் வாரத்தில் இப்படம் வெளியானது.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 140 கோடி வரை வசூலித்து முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் உள்ளது.
தனுஷின் NEEK படத்திற்கு போட்டியாக வந்த இப்படம் 100 கோடி வரை வசூல் பார்த்துள்ளது. அதை அடுத்து 57 கோடிகளை தட்டி தூக்கி மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது மதகஜராஜா.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த இப்படம் பொங்கல் ரேஸில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் 28 கோடிகளை வசூலித்து 4ம் இடத்தை பெற்றிருக்கிறது. மினிமம் பட்ஜெட் ஹீரோவாக தொடர் வெற்றிகளை பெற்று வரும் மணிகண்டனின் மார்க்கெட் இப்போது சூடு பிடித்துள்ளது.
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த காதலிக்க நேரமில்லை சுமாரான வெற்றியை பெற்றது. இருந்தாலும் 12 கோடி வரை வசூலித்து 5ம் இடத்தை பெற்றுள்ளது.
இப்படியாக இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் மார்ச் மாதம் விக்ரமின் வீர தீரன் சூரன் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதை அடுத்து ஏப்ரலில் குட் பேட் அக்லி, இட்லி கடை ஆகிய படங்கள் மோத இருக்கிறது.