வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

2022ல் ஒடிடியை மிரட்டிய 8 வெப் தொடர்கள்.. வீரவிளையாட்டை விட்டு கொடுக்காமல் வெளிவந்த ‘பேட்டை காளி’

இன்றைய காலகட்டத்தில் வெள்ளித்திரைக்கு இணையாக வெப் சீரிஸ்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தியேட்டருக்கு போய் படம் பார்க்க விரும்பாதவர்கள் கூட வெப் சீரிஸ்களை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். இதற்கு கிடைக்கும் அதீத வரவேற்பினால் சினிமா நட்சத்திரங்கள் பலர் இந்த பக்கம் வந்துவிட்டனர். இந்நிலையில் இந்த வருடம் நிறைய நல்ல கதையம்சம் கொண்ட வெப் சீரிஸ்கள் ரிலீசாகி இருக்கின்றன.

விலங்கு: இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்த வெப் சீரிஸ் விலங்கு. ஒரு மர்மமான வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக விமல் இதில் நடித்திருப்பார். வழக்கமான காவல் அதிகாரி கதையாக இல்லாமல் கதைக்களம் சற்று மாறுபட்டது.

பேட்டைக்காளி: இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கிய வெப் சீரிஸ் பேட்டைக்காளி . ஜல்லிக்கட்டு மற்றும் ஜாதிய அரசியலை மையமாக கொண்ட கதை இது. ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டுக்கு பின் இருக்கும் அரசியலை தெளிவாக சொன்ன படம் இது.

சூழல்: புஷ்கர் – காயத்ரி திரைக்கதையில் உருவான வெப் சீரிஸ் சூழல். இந்த சீரிஸில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், ஷ்ரேயா ரெட்டி, பார்த்திபன் ஆகியோர் நடித்திருந்தனர். குற்ற புலனாய்வை மையமாக கொண்ட கதை இது.

Also Read: ரத்தமும் சதையுமாக ஜல்லிக்கட்டு வரலாறு.. வெற்றிமாறனின் பேட்டைக்காளி வெப் சீரிஸ் விமர்சனம்

வதந்தி: எஸ்.ஜெ.சூர்யா, லைலா, விவேக் பிரசன்னா, நாசர், ஹரீஷ் பேரடி, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோரின் நடிப்பில் உருவான வெப் சீரிஸ் வதந்தி. ஒரு பெண்ணின் மர்மமான கொலையை கண்டுபிடிக்கும் வெப் சீரிஸ் இது. நீண்ட வருடங்களுக்கு பிறகு லைலா ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

தமிழ் ராக்கர்ஸ்: அருண் விஜய், அழகம் பெருமாள், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியானது தமிழ் ராக்கர்ஸ். சினிமா பைரஸி பற்றி பேசிய கதைக்களம் இது. பிரபல நடிகரின் படத்தை ரிலீசுக்கு முன்பே வெளியிட நினைக்கும் தமிழ் ராக்கர்ஸை முடக்க முயற்சி செய்யும் காவல் அதிகாரியை பற்றிய கதை இது.

Also Read: பேட்டைக்காளி, வாடிவாசல் ஒரே கதை தானா.. வெற்றிமாறன் கூறிய ஷாக்கான பதில்

பேப்பர் ராக்கெட்: காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், கெளரி கிஷன், ரேணுகா, சின்னி ஜெயந்த், பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான சீரிஸ் பேப்பர் ராக்கெட். அழகான, கலர்புல்லான காதல் கதையை கொண்டது இந்த சீரிஸ்.

பிங்கர்டிப்: பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன் ஆகியோர் இந்த பிங்கர்டிப் சீரிஸில் நடித்திருக்கின்றனர். டிஜிட்டல் உலகில் இருக்கும் ஆபத்துகளை பற்றி இந்த கதை விவரிக்கிறது.

அனந்தம்: இயக்குனர் V.பிரியா இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விவேக் பிரசன்னா, ஜான் விஜய், விவேக் ராஜகோபால், இந்துஜா, பிக்பாஸ் சம்யுக்தா, அஞ்சலி ராவ், மிர்னா மேனன், சம்பத் ஆகியோர் இந்த சீரிஸில் நடித்திருக்கின்றனர். அனந்தம் 1951 என்ற பெயர் கொண்ட வீட்டை மையப்படுத்தி பின்னப்பட்ட குடும்பக்கதை இது.

Also Read: திமில பிடிக்கும் போது, ஒரு வீரம் வரும் பாரு அது சாமி கொடுத்த வரம்.. வாடி வாசலுக்கு முன்பே சீறிவந்த வெற்றிமாறனின் பேட்டைக்காளி

Trending News