தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் சூர்யா. சமீபகாலமாக இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில்,தற்போது சூர்யாவின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக,‘கருப்பு’,‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’மற்றும் ‘சீன்’ஆகிய படங்களின் தொடர் வெற்றிகள் சூர்யாவின் சினிமா மார்க்கெட்டுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் ‘சீன்’படம் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்துள்ளதாகத் தெரிகிறது.
23 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம்,உலகளவில் 260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு படம் இவ்வளவு பெரிய வசூலைப் பெற்றிருப்பது கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த வெற்றியின் மூலம் சூர்யாவின் மார்கெட் கணிசமாக உயர்ந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக,தனது அடுத்த படத்திற்காக சூர்யா 75 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அடுத்தடுத்த வெற்றிகளால் நடிகர்களின் சம்பளம் உயர்வது திரையுலகில் வழக்கமான ஒன்றுதான்.அந்த வகையில்,சூர்யாவின் சம்பள உயர்வு குறித்த இந்தத் தகவல் தற்போது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தினரிடையே பேசுபொருளாகியுள்ளது.
இருப்பினும்,75 கோடி சம்பளம் குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை அடுத்தடுத்த படங்களின் வெற்றி சூர்யாவின் மார்க்கெட்டை எந்த அளவுக்கு உயர்த்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




