வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

24 வருடமாக டாப் கலெக்ஷனில் அசைக்க முடியாத இடத்தில் ரஜினி.. வசூலில் அடித்து நொறுக்கிய 4 படங்கள்

4 Movies of Rajini Good Collection: 90களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் வசூலில் பொளந்து கட்டுகிறது. கடந்த 24 வருடங்களாக கலெக்ஷனில் அசைக்க முடியாமல் ரஜினியின் படங்கள் தான் டாப் லிஸ்டில் இருக்கிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ரஜினிகாந்தின் நான்கு படங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களை காட்டிலும் அதிகளவு வசூலை ஈட்டிய படங்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

ரஜினி நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பா படத்தின் வசூல் தான் 1991 முதல் 2000 வரையிலான காலகட்டங்களில் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய படமாக இருந்தது. படையப்பா படமானது உலகம் முழுவதும் அப்பவே 50 கோடி வசூலை வாரிக் குவித்தது.

அதன் தொடர்ச்சியாக சங்கர் இயக்கத்தில் ரஜினி ஆக்சன், எமோஷனலில் கலக்கிய பிளாக்பஸ்டர் படம் தான் எந்திரன். இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடி கலெக்ஷன் செய்தது. இந்த படம் தான் 2001 முதல் 2010ல் வெளியான படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக பார்க்கப்பட்டது.

Also Read: வசூல் ரீதியாக நான் தான் No.1 என நிரூபித்த ரஜினியின் 5 படங்கள்.. மூணு தலைமுறைனா சும்மாவா!

அதன் தொடர்ச்சியாக ரஜினி- சங்கர் கூட்டணியில் வெளியான 2.0 படம் 700 கோடி வசூலை பெற்று 2011 முதல் 2020ல் வெளியான படங்களில் அதிக கலெக்ஷனான படம் என்ற பெயரை பெற்றது. அதேபோல் தான் ரஜினி தனது 72 வயதிலும் சூப்பர் ஸ்டார் என்பதை ஜெயிலர் படத்தின் மூலம் நிரூபித்து காட்டிவிட்டார். இந்த படம் 2021 முதல் 2023 இல் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய படமாகும்.

இதனால்தான் தலைவர் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பேரரசராக இருக்கிறார். இவை எல்லாம் பத்தாது என்று வேட்டையன் படத்தின் மூலம் தலைவரின் வேட்டை இனிமேலும் தொடரும். சமீபத்தில் ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி வெளியான வேட்டையன் படத்தின் டீசர் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இந்த படம் டிஜே ஞானவேல் இயக்கிக் கொண்டிருக்கிறார். ரஜினியின் இந்தப் படமும் அடுத்த வருடம் கலெக்ஷனில் பூந்து விளையாட காத்திருக்கிறது.

Also Read: 1996 ல ரஜினிக்கு தான் மக்கள் செல்வாக்கு ஜாஸ்தி.. நீதான் முதலமைச்சர் என அடித்துக் கூறிய பிரபலம்

Trending News