வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லோகேஷுக்கு எதுக்கு 25 கோடி.. யோசிக்கவே இல்ல, வேலை செய்யவும் இல்ல காப்பி அடிச்சதுக்கு சம்பளமா.!

Leo Lokesh Salary: லியோ கடந்த ஒரு மாத காலமாகவே தமிழ்நாட்டை சும்மா விடவில்லை. எங்கு திரும்பினாலும் அதை பற்றியே பேச்சி இருந்து கொண்டே இருந்தது. எந்த படத்திற்கும் இது மாதிரி பிரச்சனையை வந்ததில்லை இது மாதிரி பேச்சு வந்தது இல்லை. அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் பேசியதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் இது விஜய் படம் மற்றும் லோகேஷ் கனகராஜ் மட்டும் தான் காரணம் இந்த இரண்டு பேரும் சேர்வதனால் இந்த படம் உலகத் தமிழர்கள் அனைவராலும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிரபலங்கள் அனைவரும் கூறியபடியே அதிக எதிர்பார்ப்புடன் இந்த படம் வந்தால் கண்டிப்பாக அனைவருக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும் என்று கூறப்பட்டது. அதன்படியே நடந்தும் விட்டது. லோகேஷ் கனகராஜ் படம் என்று ஆர்வமாக சென்றவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் படத்தின் ஒரு பாதி மட்டுமே பார்க்கும் படியாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் பார்க்கவே முடியாது என்றும் அடித்துக் கூறினார்கள். அதுமட்டுமில்லாமல் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் புதுமையானதாக இல்லை பழைய காட்சிகளாக இருக்கின்றன அதுவும் காப்பி அடித்த காட்சிகளாக இருக்கிறது என்று கூறப்பட்டது.

இந்த படத்தை ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்ற இங்கிலீஷ் படத்தின் உரிமையை வாங்கி தான் படத்தை நான் பண்ணுகிறேன் என்று இயக்குனர் கூறியிருந்தார். உண்மையில் அவர் அதை வாங்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதில் உள்ள முக்கிய காட்சிகளை நான் எடுத்துக் கொள்கிறேன் அவர்களிடம் உரிமை வாங்க வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறு விட்டாராம்.

கடைசியில் இந்த படத்தில் சில காட்சிகள் 10 வருடத்திற்கு முன்பு வெளியான தெலுங்கு படத்திலேயே வந்துவிட்டது. அவர்கள் அந்த இங்கிலீஷ் படத்தை பார்த்து காப்பி அடித்துவிட்டனர். அதை பார்த்து இப்பொழுதுதான் நம் லோகேஷ் இங்கு படம் செய்து வருகிறார். லோகேஷ் திறமையை பார்த்து வியந்த தமிழ் ரசிகர்கள் தற்பொழுது வருத்தப்பட்டு வருகிறார்கள்.

எந்த சிந்தனையும் இல்லாமல் எதற்காக இந்த படத்திற்கு இவ்வளவு எதிர்பார்ப்பை அவர் ரசிகர்களை எதிர்பார்க்க வைக்க வேண்டும். எதற்காக இவருக்கு இந்த படத்திற்கு 25 கோடி சம்பளம் கொடுக்க வேண்டும். இல்லை வேண்டுமென்றே தோல்வி அடைய வேண்டும் விஜய்க்கு ஏதாவது கெட்ட பெயர் வர வைக்க வேண்டும் என்று செய்தாரா என்று எந்த விஷயமும் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது லோகேஷ் செய்தது தவறாக இருந்தாலும் ஏதோ வேண்டுமென்றே செய்திருக்கிறார், என்று தோன்றுகிறது. அந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் அவரே ஒரு பேட்டியில் லோகேஷ் சொன்ன கதை பிடிக்காமல் நாங்கள் மாற்ற சொன்னோம் என்று அதனால் தான் இப்படி கடமைக்கு அவர் எடுத்து விட்டாரா இந்த படத்தை என்று கேட்கத் தோன்றுகிறது. இந்த படத்தை இப்படி எடுத்துவிட்டு அடுத்த படத்தை நன்றாக தனக்கு பிடித்த மாதிரி எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News