90 களில் விக்ரம் சினிமாவில் பல ஆண்டுகள் நடித்து வந்தாலும், அவருக்கு சரியான பிரேக் கொடுத்த படம் சேது. இப்படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பாலாவின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான படம் சேது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அபிதா, சிவகுமார், ஸ்ரீமான், மோகன் வைத்யா, பாரதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஒரு கல்லூரியில் மாணவர் தலைவானாக இருப்பவர் சேது (விக்ரம்), அங்கு படிக்கும் அபிதாவை காதலிக்கிறார். அவர் பயந்த சுபாவம் உள்ளவர். காதலிக்காவிடில் கொன்றுவிடுவதாக சேது அவரை மிரட்டுகிறார். அதனால் அவரை காதலிக்கிறார் அபிதா.
மனநல விடுதியிலிருந்து தப்பிக்கும்சேது – கிளைமாக்ஸில் நடிப்பில் இன்னொரு பரிணாமம்
எதிர்பாரா விதமாக தன் எதிரிகளால் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு மன நோயாளியாகிறார் சேது. அங்கிருந்து அவர் தப்பி வரும் போது திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அது பிடிக்காமல் அபிதா தற்கொலை செய்வதைக் கண்டு சேது மனம் உடைந்து போகிறார்.
இதைப் பார்த்து புத்தி தெளிந்து காலில், கையில் சங்கிலியுடன் அங்கு வந்திருக்கும் சேது, பார்த்து கதறி அழும் காட்சி உருக வைப்பதாக இருக்கும்.
எல்லோரது மனதையும் நெகிழ வைக்கும் இப்படம் வெளியாகி சில நாட்கள் சரியாகப் போகவில்லை. அதன்பின், ரசிகர்களால் பேசப்பட்டு வெற்றி பெற்றது. இதில், இளையரஜாவின் இசையில் அமைந்த எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.
விக்ரமுக்கும் பாலாவுக்கும் இப்படம் பிரேக் கொடுத்தது. அவர்களின் கேரியரில் அடுத்தகட்டத்துக்குச் செல்ல உதவியது.
சேதுபடம் வெளியாகி டிசம்பர் 10 ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்பட த்தை பற்றி பலரும் வியந்து பேசி வருகின்றனர். விக்ரமின் நடிப்பு இப்படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
பாலாவின் இயக்கமும் ரசிகர்கள் & கோலிவுட் வட்டாரத்திலும் பேசப்பட்டது காதல், ஆக்சன் கலந்த சேதுபடம் இன்றும் பலரின் ஃபேவரெட் படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.