ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 27 படங்கள்.. 25 கோடி நஷ்டத்தில் செம அடி வாங்கிய டாப் ஹீரோ

September 29 OTT Release Movies: இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வாரம் கிட்டத்தட்ட 27 படங்கள் ஓடிடி ரிலீசுக்கு வருகிறது. அதாவது இந்த மாதம் முழுக்க திரையரங்குகளிலும் எக்கச்சக்க படங்கள் வெளியாக உள்ள நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதியை குறிவைத்து நிறைய படங்கள் வெளியாகிறது. அந்த படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

தமிழைப் பொறுத்தவரையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான அடியே படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் சந்தானம் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கிக் படம் சிம்ப்ளி சவுத் தளத்தில் வெளியாகிறது. காளி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ஹர்காரா படம் ஆஹா தளங்களில் வெளியாகிறது.

Also Read : வெங்கட் பிரபவை வைத்து ஜிவி பிரகாஷ் உருட்டும் அடியே ட்ரெய்லர்.. அடுத்த சயின்ஸ் பிக்சன் கதை ரெடி

அடுத்ததாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட குஷி படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து தெலுங்கில் சோனி ஓடிடி தளத்தில் ஏஜென்ட், ஆஹாவில் டட்டி ஹரி, அமேசான் பிரைமில் நித்யா மேனனின் நடிப்பில் உருவாகி இருக்கும் குமாரி ஸ்ரீமதி போன்ற படங்கள் வெளியாகிறது.

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆப் கோதா ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இந்த படம் தியேட்டரில் வெளியாகி வெறும் 38 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இதனால் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 25 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. இதை அடுத்து படம் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடிக்கு கிங் ஆப் கோதா வந்து விட்டது.

Also Read : ஒரே மாதத்தில் ஓடிடி-க்கு வந்த துல்கர் சல்மான் படம்.. அமுல் பேபி மூஞ்சிக்கு செட்டாகாத கேரக்டரால் பல கோடி நஷ்டம்

மேலும் ஹிந்தியில் சார்லி சோப்ரா வெப் சீரிஸ் சோனி லைவ் ஒளிபரப்பாக இருக்கிறது. அதேபோல் நெட்பிளிக்ஸில் ஜிம்மி ஷெர்கில் நடிப்பில் உருவாகி இருக்கும் சூனா வெப் சீரிஸ் வெளியாகிறது. இது தவிர மற்ற மொழிகளிலும் பல படங்கள் இந்த வாரம் ஓடிடியை மையம் கொள்ள இருக்கிறது.

இது தவிர திரையரங்குகளில் நாளை தமிழில் லாரன்ஸ், கங்கனா ரானவத் நடிப்பில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 படம் வெளியாகிறது. இந்த படத்திற்கு போட்டியாக ஜெயம் ரவியின் இறைவன் படமும் வெளியாகிறது. மேலும் ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பார்க்கிங் படமும் இந்த இரு படங்களுடன் போட்டியிடுகிறது.

Also Read : சைக்கோ கொலைகாரனோடு மோதும் சந்திரமுகி 2.. மரண பீதி கண்ணுலயே தெரியுது மாஸ்டர்

Trending News