Social Media: படித்து வேலைக்கு போனால் தான் நல்லா சம்பாதிக்கலாம் என்ற காலம் மாறிவிட்டது. இப்போது எல்லாம் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போட்டாலே கை நிறைய காசு பார்க்கலாம் என்ற எண்ணம் வந்து விட்டது.
சிலர் வெளிப்படையாகவே எனக்கு பிரபலமாகணும். அதனால் வீடியோ போடுறேன் என சொல்வதை பார்க்கும் போது பரிதாபமாக தான் இருக்கிறது. அவர்களுக்கு தெரிந்த உலகம் இதுதானா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆனால் படிக்கும் பிள்ளைகள் கூட சோசியல் மீடியா பிரபலங்களை பார்த்து கொடுக்கும் அலப்பறை அதிர்வடைய வைக்கிறது. இதில் கல்வி நிறுவனங்களும் இப்படிப்பட்ட பிரபலங்களை சீப் கெஸ்ட் ஆக கூப்பிடுவது தான் கொடுமை.
அப்படித்தான் சோசியல் மீடியா மூலம் பிரபலமான மணி என்பவரை ஒரு கல்லூரிக்கு சீப் கெஸ்ட் ஆக அழைத்து இருக்கின்றனர். முன்பெல்லாம் நீதிபதி, கலெக்டர் போன்ற சாதனையாளர்களை தான் பள்ளி கல்லூரி விழாவுக்கு அழைப்பார்கள்.
சோசியல் மீடியா அவலம்
ஆனால் இப்போது சினிமா பிரபலங்களை அழைக்கும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. இதுவே அதிர்ச்சி என்றால் கல்லூரி விழாவுக்கு வந்த மணியை பார்த்து மாணவிகள் ஆர்ப்பரித்தது அதிர்ச்சியோ அதிர்ச்சி.
இதை அப்போதே மீடியாவில் விமர்சகர்கள் வேதனையுடன் பகிர்ந்து வந்தனர். ஆனால் தற்போது இந்த மணி பற்றிய ஒரு உண்மை வெளிவந்ததும் பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இவரையா கல்லூரி விழாவுக்கு அழைத்தார்கள்? அப்படி என்ன தகுதி இவருக்கு இருக்கிறது? என அந்த கல்வி நிறுவனத்தின் மேல் சரமாரியான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இதற்கு அந்தக் கல்லூரி முறையான விளக்கம் அளித்தே ஆக வேண்டும்.
இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியாவில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதை யாரும் கொண்டாடுவதில்லை. இதுபோன்று ரீல்ஸ் போடுவது, கெட்ட வார்த்தையில் திட்டுபவர்கள் ஆகியோரை தான் பல பேர் கொண்டாடி வருகின்றனர்.
இதுதான் இன்றைய 2k கிட்சின் மனநிலையாக இருக்கிறது. ஆக மொத்தம் டிக் டாக்குக்கு தடை விதித்தது போல் இந்த இன்ஸ்டாகிராமுக்கும் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் குரலாக இருக்கிறது.
சமீபத்தில் வெளியான பரபரப்பு செய்திகள்
- போக்குவரத்து துறையை பழிவாங்கும் காவல்துறை.. கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் அரசு
- ஜி-யை அலற விடும் தமிழன்.. ஒடிசா முதல்வரின் செல்லப்பிள்ளை, யார் இந்த விகே பாண்டியன்.?
- கிடுக்கு பிடி போட்ட கரண் தாப்பர்.. ஆவேசமடைந்த பிரசாந்த் கிஷோர், விவாதமான நேர்காணல்