ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பைக்கில் வித்தியாசமா ரீல்ஸ் வெளியிட்ட 2K கிட்ஸ்.. இனிமேல் இப்படி பண்ணுவியா? போலீசார் அதிரடி

பெண் வேடமிட்டு பைக்கில் சென்று வீடியோ எடுத்து, அதை ரீல்ஸ் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பைக்கில் பெண் வேடமிட்டு சாலையில் ரீல்ஸ் எடுத்த 2 கே கிட் போலீஸாரிடம் சிக்கினார்.

சமூக வலைதளங்கள் மீதான மோகம்

சமூக வலைதளங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில், சிறுவர்கள் முதல் பெரியோர் அரை அனைவருமே ரீல்ஸ், ஷார்ட் மோகத்தில் உள்ளனர். எப்படியாவது தாங்கள் பிரலமாக வேண்டும் என்பதற்காக எதோ ஒரு செயலில் ஈடுபடுவது, மற்றவர்களிடம் இருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதற்கும், எல்லோரும் தங்களைத் திரும்பி பார்க்க வேண்டும் என்பதற்காக நிறைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருந்தாலும் சில நேரங்களில் விபரீதமாகிவிடுவதும் உண்டு.

சமீபத்தில் சாலையில் பைக்கில் வீலிங் செய்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தியதாக பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் அளித்ததை அடுத்து, சிறையில் இருந்து அவர் ரிலீஸானார். இதேபோல் இளைஞர்கள் பலர் சாலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீலிங், ஸ்டண்ட் செய்வது, பெண்கள் உடையை அணிவது, சாலையில் செல்வோரை பிராங் என்ற பெயரில் கஷ்டப்படுத்துவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

2 கே கிட்ஸ்- ன் அட்ராசிட்டி

2 கே கிட்ஸ் புதுமை விரும்பிகள் மாடர்னாக இருப்பதாக கூறிக் கொண்டு சாகசத்தையும், பயணத்தையும் செய்வதாக நினைத்துக் கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவதாக வீண் பிரச்சனைகளில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக தங்கள் சமூக வலைதள பக்கங்களான இன்ஸ்டா, பேஸ்புக், யூடியூப் தளங்களில் சப்ஸ்கிரைபர்ஸும்,பாலோயர்க்ளும் அதிகரித்து, எப்போது என் கேஜாக இருக்கவே விரும்பி பல சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளியிலும், கல்லூரியிலும் படித்து வரும் மாணவர்கள் ஜாலியாக இருக்க வேண்டும், என் ஜாய் பண்ண வேண்டும் என நோக்கில் சிலவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். விளையாட்டு விபரீதம் ஆகும் என்று தெரிந்தும் இதில் ஈடுபட்டு வரும் 2 கே கிட்ஸ் இந்த ரீல்ஸ், பைக் ஸ்டண்ட் செய்து, பைக் ரேஸில் ஈடுபட்டு போலீஸார் எச்சரிக்கையும் மீறி அவர்களிடம் மாட்டிக் கொண்டதை செய்திகளில் படித்திருக்கிறோம். இந்த ரீல்ஸ் மற்றும் அவர்களின் சாகசத்தை பார்த்து, அதை உசுப்பேற்றுவதற்கும் நிறைய பேர் உண்டு என்பதால் ஆபத்தை உணராமல் உள்ளனர்.

பெண் வேடமிட்ட இளைஞர்

இந்த நிலையில், வேலூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண் வேடமிட்டு பைக்கில் உலா வரும் வீடியோ காட்சிகள் இணையதளத்தி வைரலானது. அதாவது, ரில்ஸ் மூலம் பிரபமாக எண்ணிய இளைஞர் பெண் போல சேலை உடுத்தி, தலையில் பூ வைத்து லேட்டஸ் பைக்கில் அமர்ந்து கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட முக்கிய சாலையில் தலைக்கவசம் அணியாமல் வேகமாக சென்றார்.

போலீசார் தேடுதல் மற்றும் எச்சரிக்கை

இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், இந்த வீடியோவை எடுத்து வெளிட்ட அம்மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து, வேலூர் மாவட்ட எஸ்.பி மதிவாணன் அந்த மாணவரை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெண் வேடமிட்டு ரீல்ஸ் எடுத்த மாணவர் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர்;தற்போது பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த டூவீலரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இவ்விவகாரம் பற்றி விசாரணை நடத்திய பின் அபராதம் அல்லது என்ன நடவடிக்கை எடுப்பது பற்றி தெரியவரும் எனவும் இனிமேல் இதுபோல் செயலில் ஈடுபடக் கூடாது என அம்மாணவனுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

படிக்கச் செல்லும் மாணவர்கள் பைக்கில் வீலிங் போன்ற சாகசம், மற்றவர்களை திரும்பி பார்க்க வேண்டுமென செய்யும் செயல்கள் இதெல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாகி போலீஸாரே எச்சரிக்கை விடுத்த பின்னும் இவை தொடர்ந்து வருவதால் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கருத்துகள் கூறி வருகின்றனர்.

Trending News