புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரச்சிதாவிற்கு 2வது திருமணம்.. ரகசிய காதலை அம்பலப்படுத்திய பயில்வான்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழி சீரியல்களில் தொடர்ந்து நடித்து, டாப் சீரியல் நடிகையாகவே மாறினார். இவருக்கு கதாநாயகிகளுக்கு நிகராக ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ரச்சிதா தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு ஆண்டுகளாக தனித்தனியாகவே பிரிந்தே வாழ்கின்றனர்.

Also Read: விவாகரத்து செய்ததை மறைத்த 4 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முத்தி போன வயதிலும் பிளே பாயாக இருந்த ராபர்ட் மாஸ்டர்

இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கும் சூழ்நிலையில் விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ரச்சிதாவின் ரகசிய காதலை போட்டு உடைத்திருக்கிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதாவின் பின்னாடியே ராபர்ட் மாஸ்டர் சுற்றித்திரிந்தது பலருக்கும் தெரியும். ஆனால் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகும் ரச்சிதா, ராபர்ட் மாஸ்டரை திரும்பி கூட பார்க்கவில்லை. ஆனால் அவர் பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருக்கிறாராம்.

Also Read: பிக்பாஸில் கணவரை பற்றி வாய் திறக்காத ரக்ஷிதா.. பிரிவுக்கு இப்படியெல்லாம் ஒரு காரணமா!

அவரை தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ரச்சிதா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனென்றால் தினேஷ்- ரச்சிதா ஜோடி மறுபடியும் சேரும்.

அவர்களுக்கிடையே இருக்கும் கருத்து வேறுபாடு சரியாகிவிடும் என நம்பினார்கள். ஆனால் ரச்சிதா சுத்தமாகவே தினேஷை அறுத்து விட பார்த்து விட்டார், விரைவில் அவர் காதலித்துக் கொண்டிருக்கும் இயக்குனர் யார் என்பதையும் ரசிகர்களுக்கு தெரிவிக்கப் போகிறார்.

Also Read: விஜய் டிவிக்கே ஷட்டரா? ரச்சிதாவை கொக்கி போட்டு தூக்கிய பிரபல சேனல்

Trending News