புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அபிஷேக் பச்சனுடன் நடந்தது 2ஆம் திருமணம்.. வெளிவந்த ஐஸ்வர்யா ராயின் முதல் திருமண சீக்ரெட்

உலக அழகியாக ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். நந்தினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவருடைய நடிப்பு தற்போது ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவருடைய திருமணம் பற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது. ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

Also read:உலக அழகியுடன் கைகோர்த்த மணிரத்னம்.. ஐஸ்வர்யா ராயை வைத்து ஹிட் அடித்த 4 படங்கள்

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சனுடன் நடந்த திருமணம் இரண்டாவது திருமணம் தான் என்ற ஒரு செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சல்மான் கானை காதலித்தார். அது தோல்வியில் முடிந்த நிலையில் தான் அபிஷேக் பச்சனுடன் அவருக்கு காதல் மலர்ந்தது.

ஆனால் அதுவே இரண்டாவது திருமணம் தான் என்ற ஒரு செய்தி அவர்களின் திருமணம் நடந்த பொழுது வெளியாகி பரபரப்பை கிளப்பியது. உண்மையில் அப்போது என்ன நடந்தது என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இந்த திருமணம் முடிவான சமயத்தில் ஐஸ்வர்யா ராயின் ஜாதகம் ஜோதிடரிடம் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அதை கணித்து பார்த்த ஜோதிடர் ஐஸ்வர்யாவுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Also read:பொன்னின் செல்வன் காட்டிய தீராத ஆசை.. 12 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்

அதற்கு பரிகாரமாக வாரணாசியில் கும்ப விவாகம் என்ற சடங்கை நடத்துவதன் மூலம் திருமண தடையும் நீங்கும் என்று கூறியிருக்கிறார். இதனால் அபிஷேக் பச்சன் குடும்பம் உட்பட அனைவரும் வாரணாசிக்கு சென்று அந்த சடங்கை செய்திருக்கின்றனர். அப்போது ஐஸ்வர்யா ராயை அமர வைத்து பக்கத்தில் இருந்த ஒரு சிறிய மரத்திற்கு தாலியும் கட்டப்பட்டது.

இந்த பரிகார பூஜைக்கு பிறகு தான் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் திருமணம் கோலாகலமாக நடந்தது ஆனால் இந்த விஷயம் தெரியாமல் அப்போது ஊடகங்கள் ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது என்ற ஒரு கதையை பரப்பி விட்டனர். இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான விளக்கத்தை கொடுத்து இந்த சர்ச்சையை முடித்து வைத்தனர்.

Also read:பொன்னியின் செல்வன் கதையில் அரளவிட்ட 5 பெண் கேரக்டர்கள்.. இரு வேடங்களில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்

Trending News