செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் 2வது போட்டியாளர்.. பெண்களிடம் அத்துமீறிய மன்மத குஞ்சு

இரண்டு வாரங்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ரக்ஷிதா, மகேஸ்வரி, ஆயிஷா, ஜனனி, ஏ டி கே, அசீம், அசல் கோலார் உள்ளிட்ட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் கடந்த வாரம் அதிக ஓட்டுக்கள் வாங்கிய விக்ரமன் மற்றும் சிவின் இருவரும் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்த வாரம் மக்கள் ஓட்டில் பின் தங்கி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் இரண்டாவது நபர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Also Read: நான் ரொம்ப கெட்டவள்.. பிக்பாஸால் வில்லி அவதாரம் எடுத்த ஜனனி

அதாவது தொடக்கத்திலிருந்து பெண் போட்டியாளர்களை தடவுவதும், அவர்களிடம் அநாகரீகமாக நடந்து நடந்து கொள்ளும் அசல் கோலார் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறார். இவர் மகேஸ்வரி, ஜனனி உள்ளிட்ட பெண் போட்டியாளர்களை கண்ட இடத்தில் தடவி பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி பெண் போட்டியாளர் நிவா-வை இறுக்கமாக கட்டிப்பிடித்திருக்கிறார். அதிலும் குயின்ஸியுடன் இவர் அடிக்கும் லூட்டிக்கு அளவில்லாமல் போகிறது. அதற்கெல்லாம் மக்கள் தங்கள் ஓட்டுகளின் மூலம் சோழியை முடித்துவிட போகின்றனர்.

Also Read: ஆயிஷாவை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற அசீம்.. பிக் பாஸ் வீட்டில் நடந்த விபரீதம்

அதுமட்டுமின்றி தனலட்சுமி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோதும் இவரது பேச்சு மோசமாக இருந்தது. மேலும் கடந்த சீசனில் சினேகன் போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் சோஷியல் மீடியாவில் அவரை நெட்டிசன்கள் பங்கம் செய்தனர்.

அப்படியிருக்கையில் இந்த சீசனில் அசல், சைக்கோ போலவே பார்ப்பதும் நடந்து கொள்வதும் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆகையால் பிக்பாஸ் வீட்டில் மன்மதனாக சுற்றி தெரியும் அசலுக்கு மக்கள் குறைந்த வாக்குகளை அளித்து பிக் பாஸ் வீட்டில் இருந்து அவரை துரத்த போகின்றனர்.

bb6-voting

Also Read: வேட்டைனு வந்துட்டா மிருகங்கள் இல்லைன்னா எப்படி.. ஆட்டத்தை தொடங்கி வைத்த ஆண்டவர்

Trending News