வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வெற்றிமாறன் இல்லாட்டி கேள்விக்குறியாகும் 3 நடிகர்களின் கேரியர்.. வியாபாரம் ஆகாமல் படுத்த 50வது படம்

3 actors celebrating with Vetrimaaran on their heads: சினிமாவில் திரை கதையை படமாக்கும் முயற்சியில், தனது முயற்சிகளில் சமரசம் செய்யாது, பல தடைகள் வந்தாலும் பொறுமையாக தான் மேற்கொண்ட காரியத்தை முடித்து வெற்றி பெறும் வெற்றிமாறன், தமிழ் சினிமாவின் பெருமையே!

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வெற்றிமாறன், பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அடுத்ததாக ஆடுகளம் படத்தின் மூலம் தேசிய விருதை தனதாக்கிக் கொண்டார். 

பொல்லாதவன், ஆடுகளம்,அசுரன், வடசென்னை என வெற்றிமாறன் மற்றும் தனுஷின் கூட்டணி வெற்றியை மட்டுமே தக்க வைத்தது. பேட்டியில் மாணவர் ஒருவர், வெற்றிமாறனிடம் உங்களது பெரும்பாலான படங்களில் தனுஷ் நடிக்க காரணம் என்ன? என்று கேட்டதற்கு,  

“என் மேல உள்ள நம்பிக்கையில, தனுஷ் மட்டும் தான் என்கிட்ட கதை கேட்காம நடிப்பாரு” என்று நட்பை புனித படுத்தினார் வெற்றிமாறன். அது மட்டும் இல்லாம அவர் எத்தனை படங்களில்  கமிட் ஆனாலும், நான் கூப்பிட்டதும் ஓடி வருபவர் தனுஷ் மட்டுமே! என தனுஷிற்கு புகழாரம் சூட்டினார்.

ஆர் எஸ் இன்ஃபோடைமண்ட் தயாரிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது.

வெற்றிமாறன் எப்பவும் நாவல் மற்றும் புதினங்களை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதை வெற்றியும் கண்டு விடுவார். விடுதலை திரைப்படமும் ஜெயமோகனின் துணைவன் கதையே!

விடுதலை முதல் பாகத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் என பல முன்னணி நட்சத்திரங்களும் தங்களது பங்களிப்பை நிறைவாக செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக விடுதலை இரண்டாம் பாகமும்  நன்றாக உருவாகி உள்ளது.

சமீபத்தில் விடுதலை 1 மற்றும் 2 பாகங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கெடுத்து சிறப்பான வரவேற்பு பெற்றது. படத்தின் முடிவில் விழா நடைபெற்ற மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்தியது.

விஜய் சேதுபதியின் 50 வது படம் மகாராஜா

விஜய் சேதுபதி தற்போது அவரது 50 வது படமான மகாராஜா திரைப்படத்தை முடித்துள்ளார். ஆக்சன் பிளஸ் திரில்லர் கதை அம்சத்துடன் கூடிய இதை வாங்குவதற்கு ஆளின்றி, வியாபாரம் ஆகாமல் உள்ளார் மகாராஜா. இறுதியாக விஜய் சேதுபதி வெற்றிமாறனின் விடுதலை 2 படத்தை மட்டுமே நம்பி காத்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக வெற்றிமாறனின் தயவில் காமெடி நடிகரான சூரி தற்போது விடுதலை திரைப்படத்தின் மூலம் நாயகனார். மேலும் வெற்றிமாறன் கதை எழுதி தயாரிக்கும் கருடன் திரைப்படத்திலும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்க உள்ளார் சூரி.

வெற்றிமாறன் இந்த மூணு நடிகர்களை மட்டுமன்றி அவர் உருவாக்கத்தில் பங்குபெறும் அத்தனை நடிகர்களையும் அவர்களது சிறப்பம்சத்தை வெளிப்படுத்தி அவர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி விடும் பெருமைக்குச் சொந்தக்காரர் ஆவார். 

Trending News