சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அரை கிழ வயதில், சினிமாவில் சாதித்து காட்டிய 3 நடிகர்கள்.. பலமொழிகளில் பட்டையை கிளப்பும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் தனது இளமைக் காலத்திலேயே சினிமாவில் நுழைந்தாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்கும் வரையில் சில நடிகர்கள் போராடி வருகின்றன. அவ்வாறு ஆரம்பத்திலேயே சினிமாவில் நுழைந்தாலும் 40 வயதை கடந்த பின்பு மூன்று நடிகர்களுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர்களை இப்போது பார்க்கலாம்.

பிரகாஷ்ராஜ்: தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் பிரகாஷ்ராஜ். கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான டூயட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு பிரகாஷ்ராஜ் பல மொழி படங்களில் நடித்து வந்தார். இருந்தபோதும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் பிரகாஷ்ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்து அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

விக்ரம்: விக்ரம் ஆரம்பத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு சேது படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு விக்ரம் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

தற்போது அவர் மகனும் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் தற்போது மகனுக்கே போட்டியாக வரும் அளவுக்கு ஹீரோவாக வலம் வருகிறார். அவருடைய படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

விஜய் சேதுபதி: தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சூது கவ்வும் படம் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

இதை தொடர்ந்து நானும் ரவுடிதான், சேதுபதி, 96 போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இது தவிர மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

Trending News