புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமாவில் குடும்பம் குட்டியுமா செட்டிலான 3 நடிகைகள்.. இதுல குஷ்புவுக்கு கோயில் வேறயா.!

தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பல நடிகைகள் அறிமுகமாகி நடித்து ரசிகர்களை கவர்வார்கள். அப்படி நம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா உள்ளிட்ட நடிகைகள் ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்து அங்கேயே படங்களில் நடித்து வந்தார்.

மேலும் அங்குள்ள தயாரிப்பாளர்களையே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே ஹிந்தியில் சில திரைப்படங்களில் நடித்து தமிழில் அறிமுகமான நடிகைகள் மூன்று பேர் இங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். அவர்கள் யார் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

Also Read : கோபத்தில் கொந்தளித்த குஷ்பூ அண்ட் கோ.. அப்ப நீங்க தப்பு தப்பா பேசினது ஞாபகம் இல்லையா!

குஷ்பூ : 1980 கால கட்டங்களில் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்தவர் என்ற பெயர்பெற்றவர் நடிகை குஷ்பு . குஷ்பூ இட்லி, குஷ்புவிற்கு கோவில் என ரசிகர்கள் இவரை தூக்கி வைத்து இன்று வரை கொண்டாடி வருகின்றனர். ஆனால் நடிகை குஷ்பு மும்பையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் சிறுவயதிலிருந்தே குழந்தை நட்சத்திரமாக பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர். நக்கத் என்ற தனது பெயரை குஷ்பூ என்று மாற்றி தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இயக்குனர் சுந்தர்.சி யை திருமணமும் செய்து கொண்டு இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

சிம்ரன் : நடிகை சிம்ரன் ஹிந்தியில் சில திரைப்படங்களை நடித்த நிலையில் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். சிம்ரனின் இடுப்பு, நடனம், அவர் அணியும் உடையை பார்ப்பதற்கே திரையரங்கில் ரசிகர்கள் குவிந்து வருவர்.தொடர்ந்து அஜித், விஜய், பிரசாந்த் என முன்னணி நாயகர்களுடன் நடித்து நடிகை சிம்ரன் இங்கேயே கனவுக்கன்னியாக உலா வந்தார்.

Also Read : அரவிந்த் சாமியை பார்த்து ஜொள்ளு விட்ட 5 ஹீரோயினிகள்.. இன்றுவரை க்ரஸ்ஷில் இருக்கும் குஷ்பூ

ஜோதிகா : நடிகை ஜோதிகா தமிழில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் ரீமக்கான ஹிந்தியில் டோலி சஜா கே ரக்னா என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுனார். ஆனால் அத்திரைப்படம் சரியாக ஓடாததால் ஜோதிகா இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வாலி படத்தில் நடித்தார். அதன்பின் சூர்யாவுடன் காதல் திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மருமகளாக இங்கேயே செட்டிலாகிவிட்டு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல நடிகைகள் தமிழ் சினிமாவில் இருந்து வெற்றியடைந்த பிறகு ஹிந்தி சினிமாவிற்கு சென்றுவிடுவார்கள் அங்கேயே செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் இவர்கள் 3 பேரும் முக்கியமான நடிகைகள் இவர்கள் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் இல்லை பட வாய்ப்புகள் குறையும் போது இங்கு ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்தது தான் காரணம்.

Also Read : இந்த நடிகையுடன் நீங்க நடிக்கக் கூடாது.. சூர்யாவை வெளுத்து வாங்கிய ஜோதிகா

Trending News