மோசமான அடி வாங்கிய இந்தியன் இரண்டாம் பாகத்துக்கு பிறகு சங்கர், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படம் எடுத்து முடித்திருக்கிறார். இதுவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியிடுவதற்கு லைக்கா தரப்பு தடை கேட்டது.
ஷங்கர், இந்தியன் மூன்றாம் பாகத்தை முடித்து தர மறுக்கிறார். அதனால் அவரின் அடுத்த படம் ரிலீஸ் ஆக கூடாது என கவுன்சிலில் புகார் அளித்தது லைகா. இதனால் கேம் சேஞ்சர் பட தயாரிப்பாளர் தில்ராஜிலிருந்து அனைவரும் தலைவலியில் இருந்தனர்.
இந்நிலையில் தான் நான்கு பெருந்தலைகள் வீடியோ காலில் பேசி பிரச்சினையை சுமூகமாக முடித்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் கமல், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி, சங்கர் மற்றும் லைகா தரப்பு அனைவரும் வீடியோ கான்பிரன்ஸ் காலில் பேசியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இந்தியன் 3 படம் சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கமல் அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் அன்பறிவு மாஸ்டர்கள் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் லைகா தரப்போ நஷ்டத்தில் இருக்கிறோம் என இந்தியன் 3 முடித்துக் கொடுக்கும்படி கூறியுள்ளது.
கமலும், லைகா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திய மூன்றாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார். அதுபோக ஷங்கரிடம், லைகா இந்தியன் மூன்றாம் பாகத்தில் இதுவரை எடுத்த காட்சிகளை போட்டுக் காட்டும் படி கேட்டுள்ளது.
ஷங்கரும் லைகா கேட்டதற்கு சம்மதித்துள்ளார். கமல் சம்பளம் மற்ற பிரச்சனைகள் என அனைத்து மனக்கசப்புகளையும் உதயநிதி தரப்பு சரி செய்வதாகவும் பேசியுள்ளது. இதனால் சங்கர், லைகா, கமல் என மூவரும் சமாதானமாகியுள்ளனர்.
தற்போது கேம் சேஞ்சர் படத்திற்கு பச்சைக்கொடி தயாராகிவிட்டது.