சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பதுங்கி நின்னு பாயப் போகும் 3 சாத்தான்கள்.. ஜால்ரா அடிக்கும் தொடுப்புகள், சிக்கப் போவது விச்சுவா அச்சுவா?

Bigg Boss Archana and Vichitra: தற்போது சீரியல்களை விட ரியாலிட்டி ஷோவே நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது என்று அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இப்பொழுது வரை யார் டாப் 5க்கு வருவார் என்று கணிக்க முடியாத அளவிற்கு சில போட்டியாளர்கள் நிலைமை இருக்கிறது. முக்கியமாக விசித்ரா, அர்ச்சனா மற்றும் தினேஷுக்கு மக்கள் அவர்களுடைய கைதட்டுகளை தெரிவித்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இவர்களுக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று தெரிந்ததும் மற்ற போட்டியாளர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள். அதிலும் இதுவரை வானத்துக்கும் பூமிக்கும் குதித்து வந்த மாயா பூர்ணிமா மொத்தமா வாய் அடைத்து போய் இருக்கிறார்கள். மாயா மற்றும் பூர்ணிமாவின் பிளானை மற்றவர்களை கவுத்து அவர்களை வெளியே அனுப்புவது தான்.

ஆனால் அர்ச்சனா விசித்திரா-க்கு நிறைய ஆதரவு இருக்கிறது என்று தெரிந்ததும் தற்சமயத்துக்கு அடங்கி இருக்கலாம் என்று பதுங்கி இருக்கிறார்கள். ஆனால் இப்படி இவர்கள் பதுங்கி இருப்பது யாருக்கோ ஆபத்தாக முடிய போகிறது என்பது தெரிகிறது. இவர்களை தொடர்ந்து எதற்கெடுத்தாலும் வாய்ஸ் அவுட் கொடுத்து வந்த ஜோவிக்காவும் அடங்கிவிட்டார்.

Also read: ஒரு மாதத்திற்குள் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்.. ஆண்டவரை எச்சரித்த தலைவர் 

இப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா பூர்ணிமா மற்றும் ஜோவிக்கா அமைதியாக இருப்பது தான் ரொம்பவே டேஞ்சரான விஷயம். இவர்கள் விசித்திராவையும் அர்ச்சனாவையும் கவுப்பதற்கு பிளான் பண்ணுகிறார்கள். அந்த வகையில் மாயா சொல்லும் எல்லா விஷயத்திற்கும் தலையாட்டி பொம்மைகளாக சில தொடுப்புகள் அங்கே இருக்கிறது.

அதனால் இவர்களை வைத்து காய் நகர்த்த போகிறார். அதிலும் பூர்ணிமா ரொம்ப நல்லவ மாதிரி என்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகிவிடக்கூடாது என்ற பயத்தில் விசித்ராவுக்கு ஜால்ரா அடிக்கிறார். இதுவும் மாயா மற்றும் பூர்ணிமாவின் சூழ்ச்சி தான். இந்த சூழ்ச்சியில் தெரியாத்தனமாக விசித்ரா மாட்டிக்கொண்டால் மாயா நினைத்தபடி கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் தினேஷ் இன் டார்க்கெட்டும் விசித்ரா மற்றும் அர்ச்சனா மீது தான் திரும்புகிறது. இவர்களை கொஞ்சம் டேமேஜ் பண்ணி விட்டால் மக்களிடத்தில் இருக்கும் ஆதரவு குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று தினேஷ் நினைக்கிறார். ஆனால் இதையெல்லாம் தவிர்த்து விட்டு தினேஷ் கேமை ஒழுங்காக விளையாடினால் வின் பண்ணுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

Also read: இந்த வாரம் கமல் வீட்டை விட்டு துரத்த போகும் பொம்மை போட்டியாளர்.. ட்விஸ்ட் வைக்கும் பிக்பாஸ் ஓட்டிங்

Trending News