திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

வாலியிடம் உதவியாளராக வாய்ப்பு கேட்ட 3 பேர்.. பின்னர் அவரிடமே உதவியாளராக சேர்ந்த கவிஞர்.!

சினிமாவில் 15,000 பாடல்களுக்கு மேல் எழுதிய பெருமைக்குரியவர் கவிஞர் வாலி. இப்போது இவர் இவ்வுலகில் இல்லாவிட்டாலும் அவருடைய பாடல்கள் மூலம் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சினிமாவில் பாடல்கள் மட்டுமல்ல சிறுகதை, கவிதை, உரைநடை என 20 புத்தகங்களுக்கு மேல் எழுதி உள்ளார்.

இவ்வளவு அறிவுச்செறிவு நிறைந்த கவிஞர் வாலி 1963 முன்னால் தன்னிடம் மூன்று பேர் தொடர்ந்து உதவியாளர்களாக சேர வாய்ப்பு கேட்டு வந்தனர். ஒருவர் கிராமத்தை சேர்ந்தவர் தொடர்ந்து கடிதம் எழுதி வந்துள்ளார். மற்றொருவர் சென்னையில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளவர் இவரும் வாய்ப்பு கேட்டுள்ளார்.

Also Read: வாலி எழுதிய பாடலில் நடிக்க மறுத்த ரஜினி.. பின் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்ட வரிகள்

மூன்றாவது நபர் டான்ஸ் மாஸ்டரிடம் உதவியாளராக இருந்து எழுத்தின் மீது ஒரு ஆர்வத்தில் வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு தர முடியாத சூழ்நிலை. அதில் ஒருவர் கங்கை அமரன், இரண்டாவது இயக்குனர் இராமநாராயணன், மூன்றாவது நபர் இயக்குனர் ஆர் சி சக்தி.

இதில் இயக்குனர் இராமநாராயணன் 36 வருடங்களில் 125 படங்களை இயக்கி உலக சாதனை புரிந்த இயக்குனர். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்தது மட்டுமல்லாமல், ஒரு மலேசிய மொழி படத்தையும் இயக்கி உள்ளார், சில திரைப்படங்களுக்கு கதையும் எழுதினார், இவர் குட்டி பிசாசு, சுமை, ஆடி வெள்ளி, கரிமேடு கருவாயன் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். அதிலும் சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தையும் இவர்தான் தயாரித்தார். ஆனால் இவர் முதலில் உதவி இயக்குனராக வாலி இடம் பணிபுரியை நினைத்தாலும், அந்த வாய்ப்பை அவருக்கு வாலி கொடுக்க வில்லையாம்.

Also Read: இளையராஜா இசை அமைக்காத ஒரே நடிகரின் படம்.. 40 வருட சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த ஆச்சரியம்

இவரைத் தொடர்ந்து 70களில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் ஆர் சி சக்தி ரஜினியை வைத்து இயக்கிய தர்மயுத்தம், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு, கமலஹாசன் நடித்த உணர்ச்சிகள் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பெருமைக்குரியவர். இவரும் முதலில் வாலி இடம் உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்ட கெஞ்சி இருக்கிறார்.

அதேபோல் இசைஞானி இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் வாலி இடம் பணிபுரிய ஆசைப்பட்டிருக்கிறார். அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதாம். இருப்பினும் அதன் பின் கோலிவுட்டில் 80களில் கங்கை அமரன் படம் இயக்கி, தயாரித்து, இசையமைப்பாளராக மாறினார். அந்த படத்தில் வாலிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வாலியை கோவம் வர காக்க வைத்த பாக்கியராஜ்.. பொறுமையை சோதிப்பதில் காரணம் இருக்கு

- Advertisement -spot_img

Trending News