வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பைத்தியக்கார பட்டத்தில் இருந்து ரஜினியை காப்பாற்றிய 3 பிரபலங்கள்.. 1000 படத்திற்கும் மேல் நடித்த ஒரே நடிகை

3 celebrities who saved Rajini: தன்னைப் பைத்தியம் என்று சொன்னவர்களை தன் மேல பைத்தியம் ஆக்கினவர் தான் சூப்பர் ஸ்டார். அதாவது ஆரம்பத்தில் சினிமாவிற்கு வில்லனாக நுழைந்தவர் படிப்படியாக அடுத்த கட்ட லெவலாக ஹீரோவாக அவதரிக்க ஆரம்பித்தார். அப்படி இவர் ஹீரோவானதும் இவருக்கு ஏகப்பட்ட வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்து விட்டது. விடாமுயற்சியுடன் நடிப்பும், மக்களை ஈர்க்கும் ஸ்டைலும் மிக முக்கியமான காரணம்.

இதற்கிடையில் இவருக்கு பைத்தியக்காரன் என்ற பெயரும் கிடைத்துவிட்டது. அதற்கு காரணம் இவர் அறியாமலேயே இவருக்கு ஏற்பட்ட முன்கோபம், கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் அடையும் அளவிற்கு மாறிவிட்டது. முக்கியமாக இவர் சூட்டிங் ஸ்பாட்டில் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு சண்டை போடுவது அங்கு இருக்கும் பொருள்களை தூக்கி எறிவது போன்ற அட்ராசிட்டிகளை செய்திருக்கிறார்.

இதுபோன்ற விஷயங்கள் வெளிவந்ததால் இவர் என்ன பைத்தியக்காரனா ஆயிட்டாரோ என்னமோ என்று பேச்சுக்கள் சினிமாவிற்குள் வலம் பெற ஆரம்பித்து விட்டது. அதுவே போகப் போக இவருடைய பெயருக்கு பின்னால் பைத்தியக்காரன் மெண்டல் என்று சொல்லும் அளவிற்கு சில பெயர்கள் சேர்ந்து விட்டது. ஆனால் இவருடைய திறமையை முழுமையாக தெரிந்து கொண்ட மூன்று பிரபலங்கள் ரஜினியை நல்வழிப்படுத்தி இருக்கிறார்கள்.

Also read: சிவாஜி பார்த்து பொறாமைப்பட்ட மனோரமா.. நிறைவேறாத கடைசி ஆசை

ரஜினியை காப்பாற்றிய 3 பிரபலங்கள்

மனோரமா: பில்லா படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இதில் ராஜப்பா கேரக்டரில் நடித்த ரஜினிக்கு மிக நெருங்கிய தோழியாக மனோரமா பட்டு கேரக்டரில் நடித்தார். படத்திலும் சரி நிஜத்திலும் சரி ரஜினிக்கு நிறையவே சப்போர்ட் பண்ணி பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகை என்கிற பெருமை மனோரமாவுக்கு உண்டு. மனோரமாவின் கடைசி காலம் வரை விட்டுக் கொடுக்காமல் ரஜினியும் கை கோர்த்து நின்றிருக்கிறார்.

கே பாலச்சந்தர்: ரஜினிக்கு சினிமாவில் ஆஸ்தான குரு கே பாலச்சந்தர். எப்படி தன் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி அவர்கள் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசைப்படுவார்களோ, அதே மாதிரி ரஜினிக்கு ஒரு குருவாக இருந்து வழிநடத்தியவர் தான் கே பாலச்சந்தர். சில தீய பழக்கத்துக்கு அடிமையான ரஜினியிடம் உனக்கு சினிமாவில் நல்ல வெளிச்சம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு லைஃபை கெடுத்து விடாதே. உன்னுடைய மனதை மாற்றுவதற்கு யோகா மற்றும் நல்ல புத்தகங்களை படித்து முன்னேறி போ என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.

நாகேஷ்: இப்படி ஒரு அருமையான மனிதர் தற்போது தமிழ் சினிமாவில் இல்லை என்று நினைக்கும் பொழுது ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. இவருடைய எதார்த்தமான நடிப்பும் சரி பேச்சும் சரி அனைவரையும் கட்டிப்போட்டு இருக்கும். அப்படிப்பட்ட இவருக்கும் ரஜினிக்கும் மிக நெருக்கமான ஒரு விஷயம் என்றால், ரஜினியின் கேரியருக்கு பல நல்ல விஷயங்களை மோட்டிவேட்டாக பேசி அவரை முன்னுக்கு அனுப்பியவர்களில் நாகேஸ்க்கும் பங்கு உண்டு.

Also read: சூப்பர் ஸ்டாரை காயப்படுத்திய 5 பேர்.. வடிவேலு செய்த அதே தவறை செய்த மனோரமா

Trending News