வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பாண்டியனின் மகன்களை செல்லா காசாக்கிய 3 மருமகள்கள்.. தங்கமயில் வச்ச ஐஸ், தலையில் தூக்கி வைத்து ஆடும் குடும்பம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் குடும்பத்தில் இருக்கும் ஒற்றுமையை பார்க்கும் பொழுது இந்த காலத்திலும் இப்படி ஒரு குடும்பம் பார்ப்பதே அபூர்வமாக தான் இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு வீட்டுக்கு வந்த மருமகள்கள் குடும்பத்தின் ஒற்றுமைக்காகவும், மாமனார் மாமியாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதற்கு ஏற்ப கதை நகர்ந்து வருகிறது.

அதாவது பாண்டியனின் ஐம்பதாவது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக பண்ண வேண்டும் என்று தங்கமயில் ஆசைப்பட்டது உண்மையிலே பாராட்ட கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் இந்த பிளானை பற்றி மீனா மற்றும் ராஜியிடம் சொல்கிறார். அவர்களும் இது நல்ல ஐடியா என்று மூன்று பேரும் சேர்ந்து மாமனாருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் பண்ண வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து பண்ணி விட்டார்கள்.

தங்கமயிலின் பிளான் ஒர்க் அவுட் ஆயிட்டு

இதோடு விடாமல் மாமனாரின் பிறந்தநாளுக்கு நடுராத்திரியில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று தங்கமயில் ஆசைப்படுகிறார். அதன்படி ஒவ்வொருவரையும் எழுப்பி மாமாக்கு வாழ்த்து சொல்லலாம் என்று எல்லாத்தையும் எழுப்பி விடுகிறார். ஆனால் பாண்டியனை யார் போய் எழுப்புவது என்று தெரியாமல் கோமதி என்னால் முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு வேறு வழியில்லாமல் மீனா, ராஜி மற்றும் தங்கமயில் அனைவரும் சேர்ந்து பாண்டியனை எழுப்ப முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் பாண்டியன் தூக்கத்தில் பேசாமல் எல்லாரும் தூங்குங்கள் என்று சொல்லிவிடுகிறார். உடனே நடு ராத்திரியில் கேக்கு கட் பண்ண முடியாது என்று அனைவரும் தூங்கப் போய் விடுகிறார்கள். பிறகு மறுநாள் காலையில் பாண்டியன் வழக்கம் போல் கடைக்கு கிளம்பிய நிலையில் சர்ப்ரைஸ் பண்ணும் விதமாக ஒட்டுமொத்தம் குடும்பமும் தயாராகி நிற்கிறார்கள்.

அப்பொழுது வீட்டிற்குள் வந்த பாண்டியனை ஆச்சரியப்படுத்தும் விதமாக மூன்று மருமகள் ஒவ்வொரு சர்ப்ரைஸையும் செய்து காட்டி மாமனாரை அசத்தி விடுகிறார்கள். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாண்டியன் அப்படி மெய் சிலிர்த்துப் போய் நிற்கிறார். உடனே வாங்கிட்டு வந்த புது ட்ரெஸ்ஸை பாண்டியன் மற்றும் கோமதிக்கு கொடுத்துவிட்டு போட்டுவிட்டு வர சொல்லி இருக்கிறார்கள்.

அவர்கள் வந்ததும் கேக்கு கொடுத்து அதை கட் பண்ண சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள். பிறகு மருமகள் ஒவ்வொருவரும் மாமனார் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கிக் கொள்ளுங்கள். இதையெல்லாம் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த பாண்டியன், இதுவரை என்னுடைய பிறந்த நாளை நான் இப்படி கொண்டாடினதும் இல்லை. வாழ்த்து சொன்னதும் இல்லை ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்று புல்லரித்து பேசுகிறார்.

அந்த வகையில் இதுவரை மூன்று மகன்கள் இருந்த நிலையிலும் தன் அப்பாவுக்காக இந்த ஒரு விஷயத்தை செய்யாத காரணத்தினால் மருமகள் வந்த கொஞ்ச நாளிலேயே மாமனாரின் மனதை சந்தோஷப்படுத்தி விட்டார்கள். அதிலும் தங்கமயில் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் ஒட்டுமொத்த குடும்பமும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இப்படியே தங்கமயில் இருந்தாலும் பொய்ப்பித்தலாட்டம் செய்து வந்த விஷயங்களை மறக்க அடிக்கும் விதமாக அனைவரும் தங்கமயிலை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இதை கெடுக்கும் விதமாக பாக்கியம் உள்ளே புகுந்து மகள் மனதில் விஷத்தை கக்கி விட்டால் தங்கமயில் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மீனா மற்றும் ராஜி இருக்கும் வரை இந்த குடும்பம் பிரியாது என்பது போல் தெரிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடந்த சம்பவங்கள்

Trending News