வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஒரே தலைப்பில் வெளியான 3 படங்கள்.. சிவாஜி டைட்டிலை பயன்படுத்தி ஹிட் அடித்த தனுஷ்

பொதுவாக தமிழ் சினிமாவில் பழைய ஹீரோக்கள் நடிப்பில் வெளியான டைட்டில் தற்போது புது படங்களுக்கும் வைக்கப்படுகிறது. அவ்வாறு பல படங்களையும் நாம் பார்த்திருப்போம். அதிலும் பெரும்பாலாக தனுஷ் ரஜினியின் டைட்டிலை பயன்படுத்திருப்பார்.

பொல்லாதவன், படிக்காதவன், தங்க மகன், மாப்பிள்ளை என ரஜினியின் பழைய பட டைட்டிலை தனது படத்திற்கு பயன்படுத்தி ஹிட் அடித்துள்ளார். ஆனால் தமிழ் சினிமாவில் ஒரே தலைப்பில் மூன்று படங்கள் வெளியாகி உள்ளது. இது பலரும் அறியாத ஒரு விஷயமாகும்.

Also Read : ஒரே வெற்றியால் சுற்றிவரும் அரை டசன் தயாரிப்பாளர்கள்.. அடடே இன்னும் மவுசு குறையாத தனுஷ் படம்

அதாவது 1940 ஆம் ஆண்டு பியு சின்னப்பா நடிப்பில் வெளியான திரைப்படம் உத்தமபுத்திரன். இதே டைட்டிலில் 1958 ல் சிவாஜி நடித்தார். அதுமட்டுமின்றி உத்தமபுத்திரன் படம் தான் சிவாஜின் முதல் இரட்டை வேடப் படமாகும். இந்தப் படத்தில் பார்த்திபன், விக்ரமன் என்ற இரண்டு கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்திருந்தார்.

அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் தான் முழுவதுமாக வில்லன் கதாபாத்திரத்திலும் சிவாஜி நடித்திருந்தார். இந்த படம் சிவாஜிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. சிவாஜியின் உத்தமபுத்திரன் டைட்டிலை தனுஷ் பயன்படுத்தி மாபெரும் வெற்றி பெற்றார்.

Also Read : அந்தப் பட ட்ரெய்லரை பார்த்து பின் வாங்கிய தனுஷ்.. தோல்வி பயத்தில் டிசம்பர், ஜனவரி வேண்டாம் என ஓட்டம்

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் 2010ல் உத்தமபுத்திரன் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நகைச்சுவை கலைவாணர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது.

உத்தமபுத்திரன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மித்ரன், தனுஷ் கூட்டணியில் குட்டி, திருச்சிற்றம்பலம் என அடுத்தடுத்த படங்களும் வெளியாகி இருந்தது. இதில் திருச்சிற்றம்பலம் படம் சைலன்டாக வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read : டான்ஸ் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்.. சொந்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் வாத்தி

Trending News