திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தயாரிப்பாளர்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் 3 படங்கள்.. தளபதி இயக்குனருக்கு வந்த சோதனை

Unreleased Tamil Movies: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்தையும் பல போராட்டங்களுக்கு மத்தியில் தான் முடித்து ரிலீஸ் செய்கின்றனர். அதிலும் படத்தை முழுவதுமாக எடுத்துவிட்டு கடன் பிரச்சனையால் கிடப்பில் போடப்பட்ட மூன்று படங்கள், எப்போது ரிலீஸ் ஆகும் என அந்த படத்தில் நடித்த பிரபலங்களும் இயக்குனர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கடனில் மாட்டிக் கொண்டு படத்தை வெளியிட முடியாமல் தவிக்கின்றனர். அப்படிப்பட்ட மூன்று படங்களை பற்றி பார்ப்போம்.

மத கஜ ராஜா: சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், நிதின் சத்யா, சந்தனம் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்த படம் தான் மத கஜ ராஜா. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கான பிரமோஷனை எல்லாம் படு ஜோராக நடத்தினார்கள். படத்தில் விஷாலை பாட வைத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற விட்டனர். ஆனால் தயாரிப்பாளருக்கு ஒரு சில கடன் பிரச்சினை இருப்பதால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.

Also Read: இந்த வயசுல ஹனிமூன் சென்ற விஜய்யின் அப்பா.. 90ஸ் கிட்ஸ் சாபம் சும்மா விடாது

சர்வர் சுந்தரம்: காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிய சந்தானம் ஹீரோவாக அவதாரம் எடுத்து வரிசையாக பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. இருப்பினும் வரிசையாக படங்களில் நடித்து கமிட் ஆகி கொண்டிருந்த சந்தானம், ‘சர்வர் சுந்தரம்’ என்ற படத்தையும் நடித்து முடித்தார். இதில் சந்தானம் சமையல் கலைஞராக நடித்திருக்கிறார்.

ஆனந்த் பால்கி எழுதி இயக்கிய இந்த படத்தை ஜே. செல்வகுமார் தயாரித்தார். இதில் சந்தானத்துடன் வைபவ், சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 2016 ஆம் ஆண்டு முழுவதுமாக படமாக்கப்பட்ட நிலையில், விநியோகப் பிரச்சினையால் திரையரங்கில் வெளியிட முடியாமல் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: நம்பிக்கையினால் டாப் ஹீரோக்களின் பட வாய்ப்பை பெற்ற 5 இயக்குனர்கள்.. தளபதி எடுத்திருக்கும் மிகப்பெரிய ரிஸ்க்

பார்ட்டி: இயக்குனர் வெங்கட் பிரபு தனக்கே உரித்தான ஸ்டைலில் ஒரு நட்சத்திர பட்டாளத்தையே இணைத்து உருவாக்கிய படம் தான் பார்ட்டி. இந்த படத்தில் ஜெய், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன், சிவா, சந்திரன், சம்பத் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்தனர். இந்த படத்தை டி. சிவா தயாரித்தார்.

இந்த படத்தின் கதை கேட்பதற்கே சுவாரசியமாக இருக்கும். ஒரு கேங் கோவாவில் பார்ட்டி பண்ணுவதற்காகவே செல்கிறது. அப்போது பண மதிப்பிழப்பு திடீரென்று அமல்படுத்தப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களிடம் இருக்கும் பணத்தை கை மாற்றிவிட்டு எப்படி மறுபடியும் அடித்து பிடித்து ஊருக்கு வருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதையே.

இந்த படத்தை ரிலீஸ் செய்தால் நிச்சயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஆனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் சிவா கடன் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். இருப்பினும் இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு தற்போது ஜாக்பாட் அடித்தது போல் தளபதி 68 படத்திற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருப்பினும் பார்ட்டி படம் கிடப்பில் போடப்பட்டதை அறிந்த ரசிகர்கள் தளபதி இயக்குனருக்கு இந்த சோதனையா என ஆதங்கப்படுகின்றனர்.

Also Read: விஜய்க்கு நாடாளும் தகுதி கிடையாது.. புது சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Trending News