50வது படத்தில் நூறு கோடி வசூலை பார்த்த 3 ஹீரோக்கள்.. விஜய் ரஜினிக்கு கிடைக்காத அந்தஸ்து

100 crores in 50th film: ஒரு காலத்தில் சினிமாவை ஒரு பொழுதுபோக்காகவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே படங்கள் எடுக்கப்பட்டது. அதனால் லாபத்தை பற்றி எதையும் யோசிக்காமல் தொடர்ந்து பல ஹீரோக்கள் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் லாபம் மட்டும் தான் முக்கியம் என்பதை நோக்கி இயக்குனர்கள் முதல் தயாரிப்பாளர்கள் மற்றும் ஹீரோக்கள் அனைவரும் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்.

அதிலும் யார் படங்கள் அதிக வசூலை கொடுக்கிறது என்பதை போட்டி போட்டு காட்டும் வகையில் ஹீரோக்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பது யாருடைய படங்கள் அதிக கலெக்சன் ஆகிறது என்பதை கணிக்கும் விதம்தான். அதன் மூலம் மக்களிடம் ஆட்டநாயகனாக ஜெயித்துக் கொண்டு வருகிறார்கள்.

ரஜினிக்கு கிடைக்காதது தனுஷுக்கு கிடைக்குமா?

ஆனால் இந்த ஒரு விஷயம் சில முன்னணி ஹீரோக்களுக்கும் கை கொடுக்காமல் போய்விட்டது. அதன்படி விஜய் நடித்த 50வது படமான சுறா மொக்கையான விமர்சனங்களை பெற்று அதிக அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பெய்லியர் படமாக பெயர் வாங்கி கொடுத்து விட்டது. அதே மாதிரி ரஜினி நடித்த தெலுங்கு படமான டைகர் படம் ஒரு பெயிலியர் படமாக அமைந்து விட்டது.

இப்படி இந்த இரண்டு ஹீரோக்களும் தற்போது போட்டி போட்டுக்கொண்டு வசூல் மன்னனாகவும், ஆட்டநாயகனாக ஜெயித்து வந்தாலும் இவர்களுடைய ஐம்பதாவது படத்தில் கிடைக்க வேண்டிய அந்தஸ்தும் மரியாதையும் இழந்து விட்டார்கள். ஆனால் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மற்ற மூன்று ஹீரோகளுக்கு 50வது படத்தில் 100 கோடி வசூலை பெற்று ஜெயித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் கேங்ஸ்டர் கேரக்டரில் நடித்த மங்காத்தா படம் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக மாஸ் காட்டியிருப்பார். அந்த வகையில் 24 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் 100 கோடி வசூலை பெற்று அசைக்க முடியாத ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இவரை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம் விக்ரமுக்கு 50-வது படமாக வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 239 கோடிக்கு மேல் வசூலை பெற்று சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். அடுத்ததாக சமீபத்தில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா படம் 50வது படமாக வெற்றி வாகை சூடி இருக்கிறது.

அதுவும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து கொண்டாடும் அளவிற்கு விஜய் சேதுபதியை சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறிருக்கிறது. இப்படி யாருக்குமே கிடைக்காத அந்தஸ்து அஜித், விக்ரம் மற்றும் விஜய் சேதுபதிக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது மிகவும் பாராட்டக்கூடிய விஷயமாக இருக்கிறது.

இவர்களை தொடர்ந்து தனுஷ் தற்போது இயக்கி நடித்து வரும் 50வது படம் ராயன். இந்த மாதம் 26 ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. இப்படத்தின் பட்ஜெட் 100 கோடியில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தனுஷுக்கு 50வது படம் கை கொடுக்குமா 100 கோடிக்கு மேல் வசூலில் லாபம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வெளிவர இருக்கும் படத்தின் அப்டேட்

Next Story

- Advertisement -