மீண்டும் தமிழ் சினிமாவில் உருவாக போகிறது அம்மன் சாமி ட்ரெண்ட் படங்கள். ஆர் ஜே பாலாஜி எந்த நேரத்தில் மாசானி அம்மன் படத்தை கையில் எடுத்தாரோ அடுத்தடுத்து பல படங்கள் வரிசையில் வந்துள்ளது.
மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்தார் ஆர்.ஜே பாலாஜி. ஆனால் அந்த படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு அதிகமாக சம்பளம் கேட்டுள்ளார். படத்தின்பட்ஜெட்டே பத்து கோடிகள் தான் என கூறியதால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பின் வாங்கி விட்டார்.
இப்பொழுது அந்த படத்தை விட்டுவிட்டு மாசாணி அம்மன் என்னும் ஒரு புது படத்தை இயக்கி வருகிறார் ஆர் ஜே பாலாஜி . இந்த படத்தில் திரிஷாவிற்கு ஒரு கணிசமான சம்பளத்தை கொடுத்து தயார் செய்து கொண்டிருக்கிறார். அவரும் மாசாணி அம்மன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஆர்.ஜே பாலாஜி, நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் எடுத்தே ஆக வேண்டும் என்ற முடிவில் தான் இருக்கிறார். அதற்கான நேரம் கூடி வருகையில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார். இப்பொழுது திரிஷாவும், நயன்தாராவும் அம்மன் கதாபாத்திரம் நடிக்க தயாராகி விட்டார்கள்.
இவர்களைப் போலவே தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன பிரபல நடிகையும் மீண்டும் அம்மன் கதாபாத்திரம் நடிக்க தயாராகி விட்டார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 படத்தில் நடித்தவர் அனுஷ்கா செட்டி. மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்
சுந்தர் சிக்கு சவால் விடும் காணாமல் போனா நடிகை
ஏற்கனவே இயக்குனர் ஏ எல். விஜய் படத்தில் நடிப்பதாக கமிட் செய்திருந்த அனுஷ்கா செட்டி இப்பொழுது தமிழ் படம் ஒன்றில் அம்மனாக நடிக்க போகிறாராம். சுந்தர் சி அவரை அரண்மனை படத்துக்காக அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகிய போது மறுப்பு தெரிவித்து விட்டாராம் அனுஷ்கா.
- சுந்தர் சி-யால் மீண்டு வந்த கோலிவுட்
- அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான சுந்தர் சி
- ஐட்டம் நடிகை என்ற பெயரை தவிடு பொடி ஆக்கிய சுந்தர் சி