புதன்கிழமை, நவம்பர் 6, 2024

திகிலை காட்டிய ரஜினியின் 3 படங்கள்.. தலைவர் நடித்ததை பட்டி டிங்கரிங் செய்து ஸ்கோர் செய்த சுந்தர் சி

3 horror movies starring super star Rajinikanth: சினிமாவில் எப்போதுமே திகில் படங்கள் என்றால் தனி மவுசு தான். என்ன மொக்கையாக எடுத்தாலும் திரில்லர் என்ற ஒற்றை வார்த்தைக்கு ஓடி வசூலில் தன்னிறைவே அடைந்த கதைகளும் உண்டு. மொக்கையான படங்களுக்கே இப்படி என்றால் தலைவர் படம் தான் சும்மாவா?

ஆவிக்கு ஆப் அடித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியான திகில் படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வெற்றி பெற்றதுடன் வசூலில் சக்கை போடு போட்டது.

சந்திரமுகி: பாபா படத்தின் தோல்விக்கு பின் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு சந்திரமுகி கம்பேக் கொடுத்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. மலையாளத்து ரீமேக்கான சந்திரமுகியில் லக லக வென சொல்லி படத்தின் இறுதி காட்சியில் வேட்டையனாக வந்து தனது கெத்தை நிரூபித்து இருந்தார் தலைவர்.

இந்த கேரக்டருக்கு வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்க முடியாது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. திரில்லர், காமெடி,விறுவிறுப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்து இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத அளவு ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார் வேட்டையன் ராஜா.

Also read : 2024 தயாரிப்பாளர்களை மிரளவிடும் டாப் 5 ஹீரோக்களின் சம்பளம்.. இப்பவும் கெத்து காட்டும் ரஜினி

ஆயிரம் ஜென்மங்கள்: 1978 இல் சூப்பர் ஸ்டார் ரஜினி முதலில் நடித்த பேய் படம் என்ற பெருமையை தட்டிச் சென்றது ஆயிரம் ஜென்மங்கள். தன் நண்பன் விஜயகுமாருடன் நடித்த திகில் திரைப்படம். தன் தங்கையின் உடம்பிலிருந்து தங்கை கணவனின் காதலியை விரட்டும் திகில் நிறைந்த விறுவிறுப்புடன் கூடிய கதையே ஆயிரம் ஜென்மங்கள்.

தன் சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய சக்தியை சவால் விட்டு மோதி விவேகத்துடன் ஆவியை விரட்டி கைதட்டல்களை பெற்றிருந்தார் தலைவர். சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் அப்படியே 45 ஆண்டுகளுக்கு முன்னாடி ரஜினி நடித்த ஆயிரம் ஜென்மங்கள் கதை தான்.

கழுகு: 41 ஆண்டுகளுக்கு முன்பு 1981 இல் ஹாலிவுட் க்கு இணையாக எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் கழுகு. ஆன்மீகம், நாத்திகம், நரபலி, சாமியார் கொள்ளை என திகிலுடன் நொடிக்கு நொடி பரபரப்பை ஏற்படுத்தி கடைசி வரை ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைத்த திரைப்படம் கழுகு. ரஜினி ரதி, தேங்காய் சீனிவாசன், சுமலதா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் அந்த காலத்திலேயே படுக்கையுடன் கூடிய சொகுசு பேருந்தும் இந்த கதையில் பயணித்தது எனலாம்.

Also read : சுப்ரீம் ஸ்டாருக்கு சூப்பர் ஸ்டார் எழுதிய கதை.. எல்லாத்தையும் ஒரு கை பார்த்திடலாம்னு இருந்த ரஜினி

- Advertisement -spot_img

Trending News