Vijay: ஒரே கதையை பக்கி டிங்கரிங் பார்த்து படங்கள் எடுப்பது சினிமாவில் வழக்கம். ஆனால் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையே வருட கணக்கில் வித்தியாசம் இருக்கும்.
படத்தைப் பார்த்ததும் இதை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே என்று முதலில் தோன்றும். அதன் பின்னர் கண்டுபிடிப்போம்.
ஆனால் ஒரே வருஷத்தில் மூன்று படங்கள் ஒரே கதையோடு ரிலீஸ் ஆகி இருக்கின்றன. 1999 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் இந்த விஷயம் நடந்திருக்கிறது.
ஒரே கதையம்சத்தில் ரிலீஸ் ஆன 3 படங்கள்
பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் ஜோடி. இந்த படத்தில் காதல் திருமணத்திற்கு சிம்ரனின் அப்பா ஒத்துக் கொள்ளவே மாட்டார் என்ற ஒரு சூழ்நிலை வரும்.
அதே போல் தான் பிரசாந்த் வீட்டிலும். உடனே இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ஐடியா பண்ணுவார்கள். சிம்ரனின் வீட்டிற்கு அருகே பிரசாந்த் குடியேறுவது.
பிரசாந்த் வீட்டுக்கு அருகே சிம்ரன் குடி ஏறுவார். இவர்கள் இருவரும் அவரவர் பெற்றோர்களை தங்கள் மீது நல்ல அபிப்பிராயம் வர வைப்பார்கள். அதன் பின்னர் இவர்கள் காதல் கைகூடும்.
அதே ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் பூவெல்லாம் கேட்டுப்பார் படம் ரிலீஸ் ஆகி இருக்கும். இங்கு சூர்யா வீட்டில் ஜோதிகா நர்சு வேலை செய்வார்.
அதே மாதிரி ஜோதிகா வீட்டில் சூர்யா கார் டிரைவர் ஆக பணிபுரிவார். அதன் பின்னர் இவர்கள் பெற்றோரின் மனதை மாற்று வாருங்கள். அதே ஆண்டு நடிகர் விஜயும் இதே சம்பவத்தை செய்தார்.
மின்சார கண்ணா படத்தில் லண்டனில் படிக்க வரும் கதாநாயகியை விஜய் காதல் செய்வார். அக்கா குஷ்புவுக்கு ஆண்களே பிடிக்காது என்பதால் திருமணம் கைகூடாது என ஹீரோயின் சொல்வார்.
இங்கே கொஞ்சம் உல்டா பண்ணி விஜயின் குடும்பமே குஷ்பு வீட்டில் வேலைக்கு சேர்ந்து அவருடைய மனதை மாற்றுவார்கள். ஒரே வருடத்தில் ஒரே கதையை படமாக்குவதற்கும் அந்த இயக்குனர்களுக்கு அதிக தைரியம் இருந்திருக்க தான் வேண்டும்.