திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி விஜய் கௌரவத் தோற்றத்தில் நடித்த 3 படங்கள்.. பாலிவுட்டை கலக்கிய மாஸ் டான்ஸ்

Vijay Cameo Role Movies: தமிழ் சினிமாவில் கேமியோ ரோல் என்ற வார்த்தை இப்போது சகஜமாகிவிட்டது. முன்னணி ஹீரோக்கள் ஒரு சில படங்களில் தங்களுடைய முகங்களை காட்டுவது அந்த படத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து விடுகிறது. இந்த கவுரவத் தோற்றம் கலாச்சாரம் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இருக்கிறது. ஒரு ஹீரோவின் படத்தில் இன்னொரு ஒரு பெரிய ஹீரோவை பார்ப்பது படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு புதுவித உற்சாகத்தை கொடுக்கும். தளபதி விஜய் கூட கௌரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் விஜய்யின் வளர்ச்சிக்காக விஜயகாந்த் அவருடன் இணைந்து நடித்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதே போன்று விஜய் சூர்யா போன்ற நடிகர்களுக்காக அவர்களுடைய படங்களில் தன்னுடைய சொந்த குரலில் பாடி இருக்கிறார். விஜய் ஒரு சில படங்களில் தன்னுடைய அப்பாவுக்காகவும், நட்பின் காரணமாகவும் கௌரவ தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

விஜய் கேமியோ ரோல் பண்ணிய மூணு படங்கள்

சுக்ரன்: இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் கதை, திரைக்கதை எழுதி இயக்கி, தயாரித்த படம் தான் சுக்ரன். இந்தப் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் தன்னுடைய அப்பாவுக்காக நடித்திருந்தார். காதலுக்காக வீட்டை விட்டு ஓடிவரும் காதலர்கள் சந்திக்கும் பிரச்சனையிலிருந்து அவர்களை விடுவிக்கும் கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். இந்த படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு விஜய் மற்றும் ரம்பா இணைந்து ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்கள். விஜய் நடித்தும் இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

Also Read:சரியான நேரத்தில் களம் இறங்கும் தளபதி விஜய்.. இத மட்டும் பாலோ பண்ணா சி.எம் சீட் கன்ஃபார்ம்

பந்தயம்: சென்னை 600028க்கு பிறகு நிதின் சத்யாவுக்கு ஒரு சில பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் ஹீரோவாக நடிக்க கிடைத்த வாய்ப்பு தான் பந்தயம். இந்த படத்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் எழுதி, இயக்கியிருந்தார். அவருடைய மனைவி சோபா சந்திரசேகர் தயாரித்து இருந்தார். இந்த படம் முழுக்க நிதின் சத்யா நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக தன்னை அடையாளப்படுத்தி இருப்பார். இந்த படத்திலும் விஜய் தன்னுடைய அப்பாவுக்காக கேமியோ ரோலில் நடித்து இருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

ரவுடி ரத்தூர்: பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட்டில் அக்ஷய் குமார் மற்றும் சோனாக்ஷி சின்ஹா இணைந்து நடித்த படம் தான் ரவுடி ரத்தூர். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். பிரபுதேவா மற்றும் விஜய் கூட்டணியில் போக்கிரி படம் சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து நட்பின் காரணமாக விஜய் பிரபுதேவாவுக்காக இந்த பாடல் காட்சியில் தோன்றியிருந்தார். டான்ஸில் பட்டையை கிளப்பும் விஜய்யின் திறமை பாலிவுட் வரை பிரபலமாகியது.

விஜய் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த மூன்று படங்களில் கேமியோ ரோல் பண்ணியிருந்தார். ஆனால் அவருடைய ரசிகர்கள் பெரிய அளவில் அவருடைய கேமியோ ரோலை எதிர்பார்த்த படம் ஷாருக்கான் நடித்த ஜவான் தான். இதற்கு முக்கிய காரணம் அந்த படத்தின் இயக்குனர் அட்லி. ஆனால் விஜய் அதில் நடிக்காதது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது.

Also Read:சைலன்ட் மோடில் இருக்கும் விஜய், சூர்யா.. சொன்னதை நிறைவேற்றிய ரஜினியின் சிஷ்யன்

Trending News