Ajith Kumar: நடிகர் அஜித்குமார், த்ரிஷா கெமிஸ்ட்ரி விடாமுயற்சி பட ரிலீஸ் சமயத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது குட் பேட் அக்லி படத்தில் இருவது வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் சிம்ரன் இணைய இருக்கிறார்.
இதுவரையிலும் அஜித் மற்றும் த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி தான் பெஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த படங்களை பார்த்து அஜித்- சிம்ரன் கெமிஸ்ட்ரி எப்படிப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக விஜய்க்கு தான் சிம்ரன் கச்சிதமாக பொருந்துவார் என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் உண்டு.
அஜித்-சிம்ரன் கெமிஸ்ட்ரி
ஆனால் அதை தாண்டி அஜித் மற்றும் சிம்ரன் ஜோடி திரையில் ஏற்படுத்திய மேஜிக் 90ஸ் கிட்ஸ்களுக்குத் தான் தெரியும்.
வாலி படத்தில் சிம்ரன் தம்பி அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார். அண்ணன் அஜித் தான் வில்லன் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு சிம்ரனின் கேரக்டர் முழுக்க அவ்வளவு துருதுருவென்று இருக்கும்.
அதிலும் நிலவைக் கொண்டு வா பாடலில் சிம்ரன் தன்னுடைய கனகச்சிதமான கிளாமரில் கிரங்கடித்திருப்பார்.
இதற்கு முன்பு இந்த ஜோடி அவள் வருவாளா என்ற படத்தில் தான் முதன் முதலில் இணைந்தது. வாலி படத்தில் நடித்த சிம்ரன் கேரக்டருக்கு அப்படியே எதிர் பதமான கேரக்டர் தான் அவள் வருவாளா திவ்யா.
வாலி படத்திற்கு எப்படி நிலவை கொண்டு வா என்ற பாடலோ அதே மாதிரி அவள் வருவாளா படத்தின் சேலையில் வீடு கட்டவா பாடலும் இன்று வரை சூப்பர் ஹிட்.
அஜித் சிம்ரன் ஜோடி மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் உன்னை கொடு என்னை தருவேன். இந்த படமும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியில் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழித்து அஜித் மற்றும் சிம்ரன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்னி படத்திலும் நடிக்க இருக்கிறார்கள்.