New Criminal Law: நாட்டில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதில் கொலை, திருட்டு உட்பட பிஞ்சு குழந்தைகளை உடல் ரீதியாக துன்புறுத்துவதும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அது இப்போது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் வரவேற்கப்பட்டு வருகிறது. அதன் படி புதிய சட்டங்கள் சொல்வது என்ன என்பதை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
குற்றவியல் வழக்குகளை பொருத்தவரையில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதை தொடர்ந்து விசாரணை நடத்தி 45 நாட்களில் தீர்ப்பு வழங்க வேண்டும்.
தேவையில்லாமல் வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்க கூடாது. அதேபோல் சாட்சிகளை பாதுகாக்க மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை பெண் காவல் அதிகாரி மற்றும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும்.
அமல்படுத்தப்பட்ட புதிய சட்டங்கள்
ஏழு நாட்களுக்குள் மருத்துவ அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து கும்பலாக சேர்ந்து கொலை செய்தல், வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
அந்த சட்டம் இப்போது மரண தண்டனை வழங்கும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. அது மட்டும் இன்றி குழந்தையை வாங்குவதும் விற்பதும் சட்டப்படி குற்றமாகும்.
அதே போல் குழந்தைகளை கூட்டு பலவந்தப்படுத்தி கொடுமை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும். சிறு அளவில் செய்யப்படும் திருட்டு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்கள் செய்தால் சமூக சேவை செய்ய வேண்டுமென புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது..
இதன் மூலம் ஜீரோ எஃப் ஐ ஆர் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் தனிநபர் தகவல் அறிக்கையை எந்த ஒரு காவல் நிலையத்திலும் பதிவு செய்ய முடியும். இப்படியாக புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.
அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட திருத்தம் மிகவும் தேவையாக இருக்கிறது. அது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பையும் பெறுகிறது.
புதிய குற்றவியல் சட்டங்கள் வரவேற்பை பெறுகிறதா.?
- கள்ளக்குறிச்சி பிரச்சனை, திமுகவுக்கு முட்டுக் கொடுத்த கமல்
- மாணவர்கள் எடுத்த உறுதிமொழி, புது கெட்டப்பில் மேடையை அலறவிட்ட TVK
- கள்ளச்சாராய சாவு, பின்னணியில் மர்ம அரசியல்