கடந்த இரண்டு வருடங்களாக பெரிய படங்கள் நடிக்காவிட்டாலும் நடிகர் சசிகுமார் நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவர் கடைசியாக நடித்த மூன்று படங்கள்தான். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவருடைய இடத்தை அவர் நிலை நிறுத்தி விடுவார்.
இடையில் சில படங்கள் ப்ளாப்பானாலும் கடைசியாக சசிகுமார் நடித்த அயோத்தி, கருடன் , நந்தன், போன்ற படங்கள் மக்களிடையே நல வரவேற்பை பெற்றது. இதனால் அவர் படத்திற்கும் போட்டா போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் இவர் படங்களுக்கு நன்றாகவே இருக்கும்.
இப்பொழுது சசிகுமார் “டூரிஸ்ட் பேமிலி” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சக்கபோடு போட்டது. இந்த படத்தின் கன்டென்ட் வலுவாக இருப்பதால் இதை ஓடிடி நிறுவனங்கள் வாங்குவதற்கு போட்டி போட்டு வருகிறது.
இந்த படங்களால் சசிகுமார் நடித்து வரும் மற்றொரு படமான ஃப்ரீடம் படத்திற்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே கழுகு படத்தை எடுத்த சத்திய சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் சசிக்குமாரை வைத்து நான் மிருகமாய் மாற என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
அமேசான், ஹாட் ஸ்டார், netflix இந்த மூன்று நிறுவனங்களும் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி மற்றும் ஃப்ரீடம் ஆகிய இரண்டு படங்களுக்கும் போட்டி போட்டு வருகிறது. இவர்கள் கேட்கும் பணத்தை விட அதிகமாக நாங்கள் தருகிறோம் என ஒருவருக்கொருவர் மல்லு கட்டி வருகின்றனர். இதனால் பெத்த லாபத்துக்கு இந்த படங்கள் வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.