வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சரியான புரிதல் இல்லாத 3 பேர், லியோ சொதப்பல முன்பே கணித்த பிரபலம் .. கண்டுகொள்ளாத தளபதி

Leo Movie: தளபதி விஜய் நடித்த லியோ படம் கடந்த 19ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்ரீட் என்று சொல்லாம். விஜய் படத்தின் மொத்த கதையையும் ஒன் மேன் ஆர்மியாக தன்னுடைய தோளில் சுமந்து இருக்கிறார் என்பது படத்தை பார்க்கும் பொழுதே நன்றாக தெரிகிறது.

படம் ரிலீஸ் ஆன முதல் நாளே 148 கோடி வசூல் செய்தது. இந்திய அளவில் இதுவரை ரிலீசான படங்களில் முதல் நாள் அதிக வசூலை கொடுத்த படம் லியோ தான். இரண்டாவது நாள் டல் அடித்த நிலையில், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லியோ படத்தின் வசூல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி படத்தின் வசூல் 500 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு படத்தின் வெற்றி என்பது அதன் வசூலை மட்டும் வைத்து நிர்ணயிக்கப்படும் விஷயம் இல்லை. படம் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தால் மட்டும்தான் இறுதிவரை ரசிகர்களின் மனதில் நிற்கும். அந்த வகையில் பார்க்கும் பொழுது லியோ படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருக்கிறது. விஜய்க்காக மட்டும் தான் தற்போது திரையரங்குகளில் கூட்டம் கூடிக்கொண்டு இருக்கிறது.

லியோ படத்தின் ஒரு சில காட்சிகளில் தயாரிப்பாளர் லலித்துக்கு உடன்பாடு இல்லாமல் தான் இருந்திருக்கிறது. அவர் லோகேஷிடம் சொல்லி ஸ்கிரிப்ட்டை மாத்தவும் சொல்லி இருக்கிறார். ஆனால் லோகேஷ் அதை செய்யவில்லை. தளபதி விஜய் கூட அதை காதில் போட்டுக் கொள்ளவில்லையாம். இதில் இவர்கள் மூன்று பேருக்குமே மாறுபட்ட கருத்து அதிகம் இருந்திருப்பது தெரிகிறது.

லியோ படத்தின் இரண்டாம் பாதியை உண்மையிலேயே லோகேஷ் தான் இயக்கினாரா என்று ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு இருந்தது. இதற்கு முக்கிய காரணம் நரபலி விஷயம்தான். இதை முன்னரே லலித் மாற்றிவிடலாம் இது ரொம்பவும் பழைய கதை போல இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதையும் லோகேஷ் மற்றும் விஜய் காதின் போட்டுக் கொள்ளவில்லை.

படத்தின் பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுவது மல்டி ஸ்டார்ஸ் கூட்டணி தான். பெரிய பெரிய நடிகர்களுக்கெல்லாம் சின்ன ரோல்களை கொடுத்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நமத்து போனது போல் ஆகிவிட்டது. லலித் ஷூட்டிங்கின் போது பெரிய நடிகர்கள் எல்லாம் இந்த கேரக்டருக்கு வேண்டாம் என்று கூட சொல்லி இருக்கிறார். அவரின் கருத்தை எடுத்துக் கொள்ளாமல் லோகேஷ் தன்னிச்சையாக இப்படி செய்ததால் தான் படம் சொதப்பி இருக்கிறது.

Trending News