
Serial: சின்னத்திரை மூலம் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதனால் போட்டி போட்டு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் போன்ற பல சேனல்கள் புது புது நாடகங்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இதில் முதல் மூன்று இடத்தில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான் டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைத்துக் கொண்டு வருகிறது.
ஆனால் தற்போது மூன்று சேனல்களுமே ஒன்னுக்கொன்னு சலிச்சது இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப மோதிக் கொண்டு வருகிறது. அதாவது சன் டிவியில் தினமும் 9 மணிக்கு சிங்க பெண்ணே சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் எல்லோரும் இந்த ஒரு சீன் மட்டும் வேண்டாம் என்று வேண்டிக் கொண்டிருந்த அந்த ஒரு காட்சியை கொடுத்து அனைவரையும் பரிதவிக்க வைத்து விட்டது.
அதாவது அன்பு ஆனந்தியின் காதலுக்கு இடையில் மகேஷ் காதல் இருந்திருந்தாலும் அன்பு ஆனந்தியின் காதலை யாராலும் பிரிக்க முடியாத அளவிற்கு உணர்வுபூர்வமாக இருந்தது. அப்படிப்பட்ட காதலில் அன்பு ஆனந்தி பிடிவாதமாக இருந்து கல்யாணம் பண்ண வேண்டும் என்று இருக்கும் சூழ்நிலையில் எதிர்பார்க்காத விதமாக ஆனந்திக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்து விட்டது. ஆனந்தி கர்ப்பம் என்ற விஷயம் தெரிந்த நிலையில் தற்போது கதை எந்த மாதிரி மாறப் போகிறது என்று கேள்விக்குறியில் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் தினமும் 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் இந்த ஒரு நாடகம் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார்கள். ஆனால் ரோகிணி பற்றிய விஷயம் எதுவும் தெரியாமல் இருந்ததால் டிஆர்பி ரேட்டிங்கில் கொஞ்சம் டல் அடித்து விட்டது.
இதனை சரி செய்யும் விதமாக இந்த வாரம் ரோகிணி கையும் களவுமாக மாட்டி விட்டார். அதாவது ரோகிணி மலேசியா பொண்ணு கிடையாது, பணக்கார வீட்டு மகளும் இல்லை என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் ரோகிணி வீட்டை விட்டு போகும்படியான சூழ்நிலை அமைந்துவிட்டது.
இதற்கு அடுத்தபடியாக ஜீ தமிழ் சேனலில் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலும் சூடு பிடித்து விட்டது. அதாவது கார்த்திக் மற்றும் ரேவதிக்கு கல்யாணம் முடிந்து விட்டது. அதிலும் பாட்டி போட்ட சவாலில் ஜெயிக்கும் அளவிற்கு கல்யாணம் நடந்து முடிந்த நிலையில் அனைவரும் அடுத்து என்ன பரபரப்பான விஷயங்கள் நடக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இப்படி இந்த மூன்று சீரியல்களும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்களை கவர்ந்த சீரியலாக வெற்றி பெற்று இருக்கிறது. இதே மாதிரி பல வருடங்களுக்கு முன் சன் டிவியில் ரோஜா, விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா மற்றும் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் போட்டி போட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று. தற்போது சரியான போட்டி என்று சொல்லும் அளவிற்கு பல வருடங்களுக்கு கழித்து இந்த வாரம் இந்த மூன்று சீரியல்களும் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக அளவில் புள்ளிகளை பெற்றிருக்கிறது.