ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கோடை விடுமுறைக்கு அதிரடியாய் களமிறங்கும் 3 ஹீரோக்கள்.. தனுசுடன் தரமான சம்பவத்திற்கு ரெடியான Maran & co

3 tamil heroes who are going to be active during the summer holidays: தமிழ் சினிமாவில் பல படங்கள் ரெடியாகி ரிலீஸ் தேதி கிடைக்காமல் காத்திருக்கும் நிலையில் கோடை விடுமுறையை ஒட்டி,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் மூன்று பேர்  நடித்த படங்கள் வரிசையாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன, அவை

ராயன்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படமே ராயன். செல்வராகவனின் புதுப்பேட்டை படத்தை போன்றதொரு தரமான கேங்ஸ்டர் ஸ்டோரியா உருவெடுத்துள்ளது தனுஷின் இந்த ராயன்.

எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் அபர்ணா பாலமுரளி,  துஷாரா விஜயன் என பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து தரமான சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த ராயன் தேர்தல் காரணமாக  ஜூன் 7ம் தேதி வெளியாக உள்ளது. 

தங்கலான்: பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் அரக்கத்தனமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள தங்கலான்,

இயக்குனருக்கு காட்சிகள் திருப்தி தராமல் பல ரீடேக்குகள் வாங்கி பல்வேறு காலதாமதங்களுக்கு பின் ஒரு வழியாக ரெடியாகி உள்ளது.

ரசிகர்கள் கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக ஜூன் மாத இறுதிக்குள் ரிலீஸ் செய்வது என முடிவு செய்துள்ளனர் படக் குழுவினர்.

கம்பேக் கொடுக்க காத்திருக்கும் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம்

மகாராஜா: வில்லனாக தடம் பதித்து வரும் விஜய் சேதுபதிக்கு,  ஹீரோவாக நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவு கை கொடுக்கவில்லை.

இருந்த போதும் தன் கொள்கையில் இருந்து  மாறாமல் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள  இவரது ஐம்பதாவது திரைப்படம் மகாராஜா, மே 16 அன்று ரிலீஸ் ஆக உள்ளது.

அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகளை அலசி இருக்கும் இத்திரைப்படம் தனக்கு  கண்டிப்பாக ஒரு கம்பேக் மூவியாக இருக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார் விஜய் சேதுபதி.

Trending News