திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய்க்கு வாரிசு படத்தில் பிடித்த 3 விஷயம்.. பார்த்து பார்த்து செதுக்கிய வம்சி

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் வாரிசு படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தை விஜய் பார்த்து உள்ளார்.

எப்போதுமே விஜய் தன்னுடைய படத்தை புகழ்ந்து பேசியதில்லை. ஆனால் வாரிசு படத்தை பார்த்தவுடன் தன்னை மூன்று விஷயம் திருப்திபடுத்தியதாக சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். விஜயை புகழ்ந்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : அந்த ஒரு விஷயத்தில் சூர்யாவை அடிச்சுக்க ஆளே இல்ல.. அடுத்து உடைய போகும் அஜித், விஜய்யின் மார்க்கெட்

அதாவது விஜய்க்கு ஆரம்பத்தில் சென்டிமென்ட் படம் கை கொடுத்து நிலையில் அதன் பின்பு ஆக்சன் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இந்த படங்களும் மாஸ் ஹிட் கொடுக்க முழுமதுவாக சென்டிமென்ட் படங்களை கைவிட்டு விட்டு ஆக்ஷனில் இறங்கினார். ஆனால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சென்டிமென்ட் படமாக விஜய்க்கு வாரிசு படம் அமைந்துள்ளது.

இதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தை பற்றி விஜய் கூறியதில் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தாலும் அம்மா பாடல் தன்னை மிகவும் கவர்ந்ததாக விஜயை கூறியுள்ளார். வாரிசு படத்தில் முதல் முறையாக விஜய்க்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : பிரியா அட்லீயை நேரில் வாழ்த்திய விஜய்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

மேலும் வாரிசு படத்தின் கடைசி 20 நிமிடங்கள் கண்கலங்கி விட்டாராம். அந்த அளவுக்கு கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்களை உருக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு முழு படத்தை மனதிருப்தியுடன் நிறைவு வாரிசு படத்தில் கிடைத்துள்ளதாம்.

அவ்வாறு வாரிசு படத்தை பார்த்து பார்த்து இயக்குனர் வம்சி செதுக்கி உள்ளார். மொத்தத்தில் வாரிசு படம் வேற லெவலில் இருந்ததாக விஜய் கூறியுள்ளார். ஆகையால் வாரிசு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஆர்வத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளனர். மேலும் வாரிசு படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் வெளியாக உள்ளது.

Also Read : எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய தில் ராஜ்.. விஜய் கூட கட்டுப்படுத்தாத பரிதாபம்

Trending News