சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

டீ டோட்டலராக வாழ்ந்து மறைந்த 3 வில்லன்கள்.. அதிலும் உத்தமனாக வாழ்ந்த நம்பியார்!

படங்களில் கொடூரமான வில்லத்தனத்தை காட்டிய அந்த காலத்து வில்லன்கள், தங்கள் நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்கள். உடல் அசைவு, கூர்மையான பார்வை, வாள் சண்டை, வசன உச்சரிப்பு என அந்த காலத்து வில்லன்கள் திரையில் மிரட்டி இருந்தார்கள். ஆனால் அவர்கள் சொந்த வாழ்க்கையில் மது கூட அருந்தாத நல்லவர்களாகவே இருந்து இருக்கிறார்கள்.

எம்ஜிஆர் , சிவாஜி , ஜெமினி கணேசன், ஜெய் ஷங்கர் என அந்த காலத்து நாயகர்களுக்கு வில்லனாக இருந்த முக்கிய வில்லன்களின் சொந்த வாழ்க்கையை பற்றி பார்க்கலாம்.

பிஎஸ் வீரப்பா: பிஎஸ் வீரப்பா வில்லன் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளரும் ஆவார். தன்னுடைய உரத்த சிரிப்பினால், வில்லன்களில் தனித்துவம் பெற்றிருந்தார். வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் இவர் பேசிய ‘சபாஷ் சரியான போட்டி’ , மஹாதேவி படத்தில் ‘மணந்தால் மஹாதேவி , இல்லையேல் மரணதேவி’ என்னும் வசனங்கள் இன்றளவும் ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது. ஆனால் இவர் சொந்த வாழ்க்கையில் மது பழக்கம் இல்லாதவர். சம்பள விஷயத்தில் ரொம்ப கராறானவர்.

தேங்காய் சீனிவாசன் : தன்னுடைய முதல் படத்தில் தேங்காய் விற்கும் வியாபாரியாக நடித்ததால் தேங்காய் சீனிவாசன், என்னும் பெயர் இவருக்கு வந்தது. இவர் வில்லனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். குடிப்பழக்கம் இல்லாத இவர் குடிப்பவர்களுடனும் சேர மாட்டாராம். தன்னுடைய 50 வது வயதில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

எம்.ஏன். நம்பியார்: மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்னும் எம்.ஏன். நம்பியார் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார். குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். திரையில் வில்லனாக தோன்றும் இவர் ஒரு மிகப்பெரிய ஆன்மீகவாதி. கேரளாவை சேர்ந்த இவர் தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரிமலைக்கு சென்று இருக்கிறார். குடிப்பழக்கம் இல்லாதவர் , ஆனால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்.

இன்றைய காலத்து வில்லன்கள் கதாநாயகர்களை விட அழகாகவும், சன்டைக்காட்சிகள் ஏதும் இல்லமால் குண்டு வைப்பது, சுட்டுக்கொள்வது, ஹேக்கிங் என்று படு மாடர்னாக இருக்கிறார்கள். அன்றைய வில்லன்கள் கதாநாயகியின் மேல் ஒரு தலைக் காதல், கற்பழிப்பு காட்சிகள், மது அருந்துவது, புகை பிடிப்பது, கத்தி சண்டை, கம்பு சண்டை, வாள் சண்டை பக்கம் பக்கமாக வசனம் என வித்தியாசமாக மிரட்டி இருந்தார்கள்.

Trending News