வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மார்க்கெட்டுக்காக வெற்றிமாறனுக்கு கொக்கி போடும் 3 இளம் நடிகர்கள்.. கால் கடுக்க காத்திருக்கும் மாஸ்டர் பட புகழ்

தமிழ் சினிமாவில் நடிகர்களின் படங்கள் ஓடுகிறதோ, இல்லையோ மார்கெட் வேண்டும் என்பதே நடிகர்களின் ஆசை எனலாம். அப்படி தங்களுக்கு மார்க்கெட் அதிகரிக்க வேண்டுமென சில நடிகர்கள் வெற்றி இயக்குநர்களுடன் கூட்டணியில் இணைய விரும்புவார்கள். அந்த வகையில் இயக்கிய அனைத்து படங்களையும் வெற்றி படமாக மாற்றிய வெற்றிமாறனுடன் இணைய மூன்று இளம் நடிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அவர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

மகத்: இவரை நடிகர் என்று சொல்வதை விட சிம்புவின் நண்பர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சிம்புக்கு நெருக்கமானவர். அந்த வகையில் வெங்கட்பரபு இயக்கிய மங்காத்தா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மகத், அதன் பின் சரிவர பட வாய்ப்பில்லாததால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு சென்று நடிகை யாஷிக்காவுடன் கிசுகிசுக்கப்பட்டாரே தவிர, பட வாய்ப்பு இன்றுவரை இல்லை. இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அவரிடம் அவ்வப்போது பேசி வருகிறாராம்.

Also Read: விஜய், கமலை போல வாரி வழங்கிய வெற்றிமாறன்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் விடுதலை படக்குழு

அர்ஜுன் தாஸ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், தொடர்ந்து தனது நடிப்பின் மூலமாக விக்ரம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தற்போது மலையாளத்திலும் களமிறங்கி நடித்து வரும் இவர், கட்டாயம் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென துடியாய் துடித்துக் கொண்டு வருகிறார்.

Also Read: அவர் இல்லைனா எனக்கு இது கிடைச்சிருக்காது.. நன்றியுடன் திரும்பி பார்க்க வைத்த அர்ஜுன் தாஸ்

ஹரிஷ் கல்யாண்: மலையாளத்தில், சிந்து சமவெளி படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான ஹரிஷ் கல்யாண், தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்பு கிடைத்து நடித்து வந்த இவர், சாக்லேட் பாயாக வளம் வருகிறார். இருந்தாலும் பெயர் சொல்லும் அளவில் எந்த ஒரு படமும் இல்லாததால் காதலி போல் வெற்றிமாறனின் வீட்டு வாசலில் நின்று, தினமும் பூங்கொத்து கொடுத்து வந்தார். பட வாய்ப்புக்காக இவர் இப்படி செய்வதை பார்த்த வெற்றிமாறன் தேவைப்பட்டால் அழைக்கிறேன் என சொல்லிவிட்டு வழியனுப்பினாராம்.

Also Read: தூங்கு மூஞ்சி அஸ்வினை மிஞ்சும் ஹரிஷ் கல்யாண்.. சிரிப்பாய் சிரிக்கும் கோடம்பாக்கம்

Trending News