ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ஜீவா கொடுத்த 30 லட்சம், ஸ்ருதி மூலமாக மாட்டப் போகும் ரோகினி.. முத்து மீனாவிற்கு சப்போட்டாக பேசும் பல குரல்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி தொடர்ந்து அடுக்கடுக்காக பொய்யும் பித்தலாட்டங்களையும் பண்ணி மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வருகிறார். ரோகினியின் சுயரூபம் தெரியாமல் விஜயா மற்றும் மனோஜ், ரோகினியை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி ரோகினி என்ன பண்ணாலும் அதில் பாராட்டு வாங்கும் அளவிற்கு பல திருட்டு வேலைகளையும் பார்த்து வருகிறார்.

அந்த வகையில் மனோஜ் பிசினஸ் பண்ணுவதற்கு எங்க அப்பா தான் 30 லட்சம் பணத்தை கொடுத்து இருக்கிறார் என்று குடும்பத்தில் இருப்பவர்களை நம்ப வைத்து விட்டார். ஆனால் இது அண்ணாமலையின் பணம் அதை மனோஜ் திருடிட்டு போயி ஜீவாவிடம் ஏமாந்து நின்னார். இதனால் எதேர்ச்சியாக ரோகிணி கண்ணில் ஜீவா மாட்டியதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வட்டி முதலுமாக சேர்த்து 27 லட்சத்திற்கு பதிலாக 30 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டார்கள்.

கையும் களவுமாக சிக்க போகும் ரோகிணி

ஆனால் இதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். அந்த வகையில் இந்த பணத்தை வைத்து கமுக்கமாக மனோஜ் பிசினஸ் தொடங்கி ரோகினி அனைவரது கண்ணிலும் விரலை விட்டு ஆட்டும் அளவிற்கு ஓவராக கெத்து காட்டி வருகிறார். தற்போது கையும் களவுமாக மாட்டும் அளவிற்கு ஒரு விஷயம் நடக்கப் போகிறது. பாட்டியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சுருதி மற்றும் மீனா இருவரும் சேர்ந்து பூக்கடைக்கு பூ வாங்க போகிறார்கள்.

அப்பொழுது மீனா பூ வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது சுருதி வைத்திருக்கும் பேக்கை ஒருவர் திருடிட்டு போகிறார். இதனால் பதட்டமான இருவரும் முத்துவிற்கு தகவலை கொடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கம்ப்ளைன்ட் பண்ண மூன்று பேரும் போகிறார்கள். அப்பொழுது எதேர்ச்சியாக முத்து மீனா கையெழுத்து போட்டது, அதே பேப்பரில் ரோகினி மனோஜ் கையெழுத்து போட்டிருக்கும் பேப்பரை சுருதி பார்க்கிறார்.

பிறகு இதைப் பற்றி அங்கு இருந்த கான்ஸ்டபில் இடம் விசாரிக்கும் பொழுது இந்த மனோஜ் யாரு என்று கேட்கிறார். அதற்கு முத்து என்னுடைய அண்ணன் தான் என்று சொல்லிய நிலையில் இவர் ஏற்கனவே ஜீவா என்பவரிடம் 27 லட்சப் பணத்தை ஏமாந்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் அந்த ஜீவாவை பார்த்து கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்தார்கள்.

அப்பொழுது அவரிடம் இருந்து வட்டி முதலுமாக சேர்ந்து ரோகிணி மற்றும் மனோஜ் என்பவர் 30 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டார்கள் என்ற விஷயத்தை கான்ஸ்டபிள் சொல்கிறார். இதை கேட்டதும் அதிர்ச்சியான மூன்று பேரும் வீட்டில் போய் இருக்கிறது என்று முத்து ஆவேசப்படுகிறார். உடனே சுருதி நீங்கள் அமைதியாக இருங்கள் நான் இதை எப்படி டீல் பண்ணனும் என்று பார்த்துக் கொள்கிறேன் என்று விஜயா வீட்டுக்கு போகிறார்கள்.

அந்த வகையில் ஸ்ருதி மூலம் ரோகிணி மற்றும் மனோஜ் பண்ணுன தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் தெரிய வரப்போகிறது. மேலும் முத்து மீனாவிற்கு சப்போர்ட்டாக சுருதி நியாயம் கேட்டு பேசுகிறார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Trending News